தமிழ்நாடு முழுவதும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் உருவபொம்மையை எரித்து திமுகவினர் போராட்டம்!
தமிழ்நாடு முழுவதும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் உருவபொம்மையை எரித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
03:54 PM Mar 10, 2025 IST | Web Editor
Advertisement
நாடாளுமன்றத்தில் இன்று (மார்ச்.10) நடப்பாண்டு பட்ஜெட் கூட்டத் தொடரின் 2ஆம் அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து திமுக எம்.பி.-க்கள் தன்னை சந்தித்தபோது புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு தயாராக இருந்துவிட்டு மீண்டும் அரசியல் செய்கிறார்கள் என்றும் நாகரீகமற்றவர்கள் என்றும் விமர்சனம் செய்தார். அவரின் இந்த பேச்சுக்கு நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி-க்கள் கண்டனம் தெரிவித்தனர்.
Advertisement