Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பொய் பேசி வருகிறது திமுக! - கோவையில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேச்சு

08:50 AM Mar 28, 2024 IST | Web Editor
Advertisement

திமுகவினர் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பொய் பேசி வருவதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.

Advertisement

நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையடுத்து, அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள் : “ரூ.410 இருந்த சிலிண்டரின் விலையை ஆயிரம் ரூபாய்க்கு உயர்த்தியதுதான் பிரதமர் மோடியின் சாதனை!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இந்நிலையில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென் திருப்பதி நால்ரோடு பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில், பாஜக தேர்தல் செயல்வீரர்கள்
கூட்டம் நடைபெற்றது. இந்த தேர்தல் செயல்வீரர்கள் கூட்டத்தில் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த பாஜக நிர்வாகிகள் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் மத்திய இணை அமைச்சரும், நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளருமான எல். முருகன் கலந்து கொண்டு தேர்தல் களப்பணி குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது :

“ஆட்சிக்கு வருவதற்கு முன் அளித்த தேர்தல் வாக்குறுதியான பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, மகளிர் சுய உதவிக் குழு கடன் ரத்து உள்ளிட்ட எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் திமுகவினர் பொய் பேசி வருகின்றனர். மேலும் திமுகவை பொறுத்தவரை பொய் பேசுவது, கொள்ளையடிப்பது, ஊழல் செய்வது மற்றும் குடும்ப ஆட்சி தான் கொள்கையாக உள்ளது. எம். ஜி. ஆர் மற்றும் வ. உ. சிதம்பரனார் உள்ளிட்டோர் குறித்து தரம் தாழ்ந்து கடந்த காலங்களில் விமர்சனம் செய்த ஆ. ராசாவின் செயல்பாடுகள் குறித்தும், அவரின் இந்து எதிர்ப்பு நிலைப்பாடு குறித்தும் பொதுமக்களுக்கு பாஜகவினர் தெரிவிக்க வேண்டும்”

இவ்வாறு மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்.

Tags :
BJPcentralministerCoimbatoreElection2024Elections2024LmuruganLokSabhaElectionnda
Advertisement
Next Article