Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

”திமுகவிற்கு சமூக நீதி பற்றி பேச தகுதியில்லை”- அன்புமணி ராமதாஸ் விமர்சனம்..!

திமுகவிற்கு சமூக நீதி பற்றி பேச தகுதியில்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
10:25 PM Nov 09, 2025 IST | Web Editor
திமுகவிற்கு சமூக நீதி பற்றி பேச தகுதியில்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
Advertisement

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழ் நாடு முழுவதும் உரிமை மீட்பு நடைப்பயணம் மேற்கோண்டார். இந்த நடைப்பயணத்தின் 100 வது நாளை  முன்னிட்டு தருமபுரியில்  நடைபயண நிறைவு விழா பொதுக் கூட்டம் நடபெற்றது.  வருகிறது. இதில் அன்புமணி ராமதாஸ், சௌமியா அன்புமணி ராமதாஸ், வழக்கறிஞர் பாலு  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். இக்கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ்,

Advertisement

”தமிழ் நாட்டிற்கு தேர்தல் அறிவிக்க உள்ளனர்,. திமுக அரசை  தமிழ்நாட்டை விட்டு விரட்டி அடிக்க வேண்டும். இந்த நிகழ்ச்சி தொடங்கும் போது விவாதம் எழுந்தது. ஆனால் நிறைவு விழாவுக்கு எந்த விவாதமும் எழவில்லை. இந்த நடைப்பயணம் செய்யக்கூடாது என வழக்குகளை காவல் துறை போட்டது. ஆனால் இந்த நடைப்பயணம் மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளது‌.

இந்த 28 ஆண்டுகளில் எத்தனையோ மாநாடு, கூட்டங்கள், நடைப்பயணம் நடத்தியுள்ளேன். ஆனால் அனைத்து நிகழ்ச்சிகளை விட எனக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி இது தான். நான் நான்கு மாவட்டத்திற்கு போகவில்லை. அதுக்குள்ளே மூன்று மாதம் முடிந்துவிட்டதே என்று தோன்றுகிறது.

காந்தியடிகள் தண்டி யாத்திரை சென்றார். முதலில் காந்தியுடன் சென்றவர்கள் 78 பேர்தான். ஆனால் நிறைவு நாளில் 1.50 இலட்சம் பேர் கலந்து கொண்டனர். இந்திய விடுதலை போராட்டத்திற்கு அது முக்கியமான நடைப்பணம். அதுபோலத்தான் நான் இந்த கொள்ளைக்காரர்களுக்கு முடிவுகட்ட நடைப்பயணம் சென்றேன்.

காஞ்சிபுரத்தில் கழிவுகளை ஏரியில் விடுகிறார்கள். ராணிப்பேட்டை மாவட்டத்தில் குரோமியம் கழிவுகள்  கலந்து மண்ணின் தரம் குறைந்துள்ளது‌. டெல்டா மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல் மணிகளை பாதுகாக்க, சேமிப்பு கிடங்கு இல்லை. திமுகவினர் டெல்டாவை கெடுத்து வைத்துள்ளனர்.

ஸ்டாலின் அவர்களே இந்த மக்கள் மீது உங்களுக்கு என்ன கோபம். என்ன பாவம் பண்ணார்கள். ஸ்டாலினுக்கு நிர்வாகமே தெரியாது‌. இப்படி ஒரு முதலமைச்சரை தமிழகம் பார்த்திருக்காது‌. திமுக 100-க்கு 13 மதிப்பெண்தான் பெற்றுள்ளது.

திமுகவிற்கு சமூக நீதி பற்றி பேச தகுதியில்லை. திமுக மனு நீதியை நிலைநாட்டி கொண்டிருக்கிறது. அமைச்சரவையில் பட்டியல் சமூக அமைச்சர்கள் கடைசி வரிசையில் உள்ளனர். திமுக மனு நீதிக்கு அடிமையாக உள்ளது. திமுக பட்டியலினத்தை சேர்ந்தவர்களுக்கு பதவி கொடுத்திருக்கிறதா? திமுக பட்டியலின மக்களுக்கு, வன்னியர் மக்களுக்கு எதிரான கட்சி‌” என்றார்.

Tags :
100thdayAnbumaniRamadossCMStalinDMKlatestNewsPMKTNnews
Advertisement
Next Article