2021 தேர்தல் அறிவிப்புகளில் பத்து சதவீதத்தை மட்டுமே திமுக நிறைவேற்றியுள்ளது - எடப்பாடி பழனிசாமி!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நத்தம் சட்ட மன்ற தொகுதியில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,
”விவசாயத்தை நம்பி வாழ்கின்ற மக்களுக்கு அதிமுக ஆட்சி பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி நல்லது செய்தது. இரண்டு முறை கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்துள்ளது. குடிமாராமத்து திட்ட மூலம் நீர் சேமிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு மும்முனை மின்சார திட்டம் வழங்கியது.பயிர்கள் சேதம் அடைந்தால் நிவாரணம் வழங்கியது. இப்படி விவசாயிகளை தன்னை இமைக்காப்பது போல காத்தது அதிமுக அரசு.
2021 தேர்தலில் திமுகவினர் 525 அறிவிப்புகளை வெளியிட்டனர். அதில் பத்து சதவீதம் தான் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. திருமண உதவி திட்டம், தாலிக்கு தங்கம் திட்டம் நிறுத்தப்பட்டுவிட்டது. திமுக அரசு மக்களுக்கு நல்லது செய்யும் திட்டங்களை எல்லாம் நிறுத்திவிட்டது. அம்மா மினி கிளினிக் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நிறுத்தப்பட்டுவிட்டது. லேப்டாப் கொடுத்ததை திமுக அரசு நிறுத்திவிட்டது அதிமுக வந்ததும் மீண்டும் தரப்படும். ஏழைகளுக்கு எது செய்தாலும் ஸ்டாலினுக்கு பொறுக்காது. மகளிர் ஆயிரம் தருவதாக எப்போதும் ஸ்டாலின் பேசுகிறார். இதற்கு காரணம் அதிமுக கொடுத்த அழுத்தம். மேலும் 30 லட்சம் குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் ஆயிரம் தருவதாக அறிக்கை கொடுக்கிறார். வாக்குகளை நம்பி இந்த அறிவிப்பை வெளியிடுகிறார். அடுத்த ஆண்டு தேர்தலில் சம்பட்டி அடி திமுகவுக்கு கொடுக்க வேண்டும் கலெக்ஷன் கமிஷன் கரெக்ஷன் அது மட்டும் சரியாக செய்கிறார்கள். இந்த ஆட்சியில் டாஸ்மாக் 6 ஆயிரம் மதுக்கடைகள், பெரும்பாலன பார்கள் திமுகவினர் எடுத்துள்ளனர். பத்து ரூபாய் அதிகமாக வாங்கி முறைகேடு நடக்கிறது. அமலாக்கத்துறை டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு செய்தி வந்துள்ளது. இந்த ஊழல் அரசு தொடர வேண்டுமா?. ஏழைகளுக்கு எந்த திட்டத்தையும் இந்த அரசாங்கம் செய்யவில்லை. மா விசாயம் வீழ்ச்சி அடைந்தது. மா விவசாயிகளுக்கு இந்த அரசு நிவாரணம் கொடுக்கவில்லை. நமது கோரிக்கையை இந்த அரசு செயல்படுத்தவில்லை”
என்று தெரிவித்தார்.