"வரி மேல் வரி போட்டு மக்களை வதைக்கிறது திமுக அரசு"- எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “மக்களை காப்போம் தமிழத்தை மீட்போம்” என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். பரப்புரையின் 3ஆம் கட்டமாக கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், இன்று கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில் பரப்புரையை மேற்கொண்ட அவர், கிருஷ்ணகிரியில் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ரவுண்டான பகுதியில் பேசினார்.அவர் பேசியது,
”திமுக ஆளும் கட்சியாக இருக்கலாம். ஆனால் கோவை மாவட்டத்தில் அதிமுக தான் ஆளும் கட்சி. திரூப்பூர், கோவை மாநகராட்சியில் அதிமுக ஆட்சியின் போது பல்வேறு திட்டங்கள்செயல் படுத்தப்பட்டது. திருப்பூரில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, கால்நடை மருத்துவ ஆராய்ச்சி கல்லூரி அத்திகடவு அவினாசி திட்டம் ஆகியவை அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டது.
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் என்பது திமுகவின் சித்து விளையாட்டு. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு உள்ளது. தங்கம், வெள்ளி நிலவரம் போல் கொலை நிலவரம் என்ன என்று கேட்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது. கொலை, கொள்ளை நடக்காத நாளே இல்லை. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ள ஆட்சி தேவையா? பட்டபகலில் ஆசீட் அடித்து நகை கடையில் கொள்ளை அடிக்கிறார்கள். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. காவல்துறைக்கும் பாதுகாப்பு இல்லை. குற்ற செயலில் ஈடுபடுபவர்களுக்கு காவல்துறையை கண்டால் அச்சம் இல்லை.
திமுக அரசு காவல்துறையின் கைகளை கட்டிப்போட்டு உள்ளது. அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்ததுக்கு துணை ஜனாதிபதி கைகளில் விருது வாங்கினேன். தற்போது போதை பொருள் நிறைந்த மாநிலமாக தமிழகம் விலங்கிகொண்டு இருக்கிறது. ஊழல் இல்லாத துறையே தற்போது இல்லை. கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் தான் திமுக தாரக மந்திரம். ஒரு நாளைக்கு ஒன்னரை கோடி மது பாட்டில் விற்கப்படுகிறது. ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பின்பு 67% மின் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. வீடு, கடைகளுக்கு மின் கட்டணம் உயர்ந்து உள்ளது. வீட்டு வரி 100% உயர்த்தப்பட்டு உள்ளது. கடை வரியும் உயர்த்து விட்டனர். குப்பைக்கும் கூட வரி போட்டு விட்டனர். திமுக அரசு வரி மேல் வரி போட்டு மக்களை வதைக்கிறது ” என்று தெரிவித்தார்.