Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

போதைப்பொருள் கடத்தல் விவகாரம் - இபிஎஸ்க்கு எதிராக ஆர்எஸ் பாரதி தொடர்ந்த வழக்கு மாஸ்டர் நீதிமன்றத்திற்கு மாற்றம்!

06:01 PM Dec 17, 2024 IST | Web Editor
Advertisement

எடப்பாடி பழனிசாமி மீது திமுக தொடர்ந்த வழக்கை மாஸ்டர் நீதிமன்றத்திற்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

கடந்த மார்ச் மாதம் போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் கைதான ஜாபர் சாதிக்கை, திமுகவுடன் தொடர்புபடுத்தி பேசியதற்காக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் போதைப் பொருள் பயன்பாடு குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பொது தளத்தில் இருந்த தகவல்களின் அடிப்படையிலேயே ட்விட் செய்ததாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சாட்சி விசாரணையை பதிவு செய்வதற்காக வழக்கை பிப்ரவரி 3ஆம் தேதிக்கு மாஸ்டர் நீதிமன்றத்திற்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டார்.

Tags :
ADMKDMKdrug caseedappadi palaniswamiEPSJaffer SadiqMadras High Courtrs bharathi
Advertisement
Next Article