திமுக தலைமைச் செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு!
05:08 PM Dec 14, 2024 IST | Web Editor
Advertisement
டிச.18-ம் தேதி நடைபெறவிருந்த திமுக தலைமைச் செயற்குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
Advertisement
இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நாடாளுமன்றத் கூட்டத் தொடரில் நமது கட்சி உறுப்பினர்கள் முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்க வேண்டியுள்ளதாலும், 18.12.2024 அன்று சென்னையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட திமுக தலைமைச் செயற்குழுக் கூட்டம் தற்போது ஒத்திவைக்கப்படுகிறது.
திமுக தலைமைச் செயற்குழுக் கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.