Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மதுரையில் மக்களை சந்தித்த திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு! 3 நாட்களில் 10 மாவட்ட மக்களிடம் பரிந்துரைகள் பெறப்பட்டன!

10:01 PM Feb 07, 2024 IST | Web Editor
Advertisement

மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மாவட்ட மக்களிடம் கோரிக்கைகளை பெற்ற திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு!

Advertisement

திமுக நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் iன்று மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மாவட்ட மக்களிடம் கோரிக்கைகளை பெற்ற நிலையில், இதுவரை 10 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களை நேரில் சந்தித்து, அவர்கள் வழங்கிய பரிந்துரைகளை பெற்றுள்ளனர்.

2024 மக்­க­ளவை தேர்­த­லை­யொட்டி, தேர்­தல் அறிக்கை தயா­ரிப்­ப­தற்­காக தி.மு.க. துணைப் பொதுச்­செ­ய­லா­ளர் கனி­மொழி எம்.பி. தலை­மை­யில் 11 பேர் கொண்ட குழு அமைக்­கப்­பட்­டுள்­ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறி­வு­ரைப்­படி இக்­குழு பிப்ரவரி 5 ஆம் தேதி முதல், தமிழ்­நாட்­டின் முக்­கிய நக­ரங்­க­ளுக்கு சென்று மக்களை நேரில் சந்தித்து பரிந்துரைகளை பெறும் பணியை செய்து வருகிறது. உரி­மை­களை மீட்க ஸ்டாலி­னின் குரல் - நாடா­ளு­மன்­றத்­தில் ஒலித்­திட வேண்­டிய தமிழ்­நாட்­டின் கருத்­து­கள் என்ற தலைப்­பில், பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை இக்குழு கேட்டு வருகிறது.

பிப்ரவரி 5 ஆம் தேதி தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்கள், பிப்ரவரி 6 ஆம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பரிந்துரைகளை வழங்கினர். திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு இன்று(07.02.24) மதுரை மாவட்டத்தில் மக்களை சந்தித்தனர். மதுரை துவாரகா திருமண மண்டபத்தில் வைத்து தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய பொதுமக்களின் கோரிக்கைகளை பெற்றனர். அதில் மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

தி.மு.க. துணைப் பொதுச்­செ­ய­லா­ளர் கனி­மொழி கருணாநிதி எம்.பி., திமுக செய்தித் தொடர்புத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், திமுக விவசாய அணிச் செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், திமுக சொத்துப் பாதுகாப்புக் குழுச் செயலாளர் - அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், திமுக வர்த்தகர் அணி துணைத் தலைவர் கோவி.செழியன், திமுக மாணவரணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., திமுக மருத்துவ அணிச் செயலாளர் மருத்துவர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் பரிந்துரைகளை மக்களிடமிருந்து பெற்றனர்.

மதுரை வடக்கு மாவட்டச்செயலாளர் - அமைச்சர் மூர்த்தி, மதுரை தெற்கு மாவட்டச்செயலாளர் மு.மணிமாறன், மதுரை மாநகர் மாவட்டச்செயலாளர் கோ.தளபதி, தேனி வடக்கு மாவட்டச்செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், தேனி தெற்கு மாவட்டச்செயலாளர் நா.ராமகிருஷ்ணன், திண்டுக்கல் கிழக்கு மாவட்டச்செயலாளர் இ.பெ.செந்தில்குமார், திமுகவைச்சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

வணிகர் சங்கங்கள், விவசாயிகள், மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர், குடியிருப்போர் நலச்சங்கங்கள், செவிலியர்கள், பொறியாளர் சங்கங்கள், தொழில் முனைவோர், அரிசி ஆலை உரிமையாளர்கள், மாணவர் சங்கங்கள், மக்கள் நல மன்றங்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், அரசு ஊழியர்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்த பரிந்துரையை ஆர்வமுடன் வழங்கினர்.

Tags :
DMKelection manifestoElection2024Kanimozhi KarunanidhiMadurainews7 tamilNews7 Tamil Updates
Advertisement
Next Article