அண்ணாவின் கொள்கைகளை திமுக கடைப்பிடிப்பதில்லை - அன்புமணி குற்றச்சாட்டு!
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் 10 வகையான அடிப்படை உரிமைகளுக்காக ”தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம்” என்ற தலைப்பில் நடைபயணத்தை கடந்த 25ஆம் தேதி தொடங்கினார். அதன்படி, அன்புமணி ராமதாஸ் இன்று காஞ்சிபுரம் மேட்டு தெரு பகுதியில் இருந்து பேருந்து நிலையம் வரை நடை பயணம் மேற்கொண்டார். பின்னர் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தி அருகே நடைபெற்ற கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசினார்.
அப்போது அவர், ”திமுக அண்ணாவின் பெயரை சொல்வதற்கான தகுதியை இழந்துவிட்டது. அண்ணாவின் கொள்கைகளை தற்போது கடைபிடிப்பதில்லை. அண்ணா பூரண மதுவிலக்கு என்ற கொள்கையை கடைப்பிடித்தார். அவர் உயிர் வாழ்கின்ற வரை அதனை நிறைவேற்றினார். அதன்பிறகு வந்தவர்கள் மதுவை திறந்து விட்டு பிறகு தமிழ்நாடு என்று சொன்னாலே அது சாராய நாடு கஞ்சா நாடு என்ன மாற்றி வட்டனர். தமிழக காவல்துறை திமுக மாவட்ட செயலாளர்கள் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. --அன்புமணி பகிரங்க குற்றச்சாட்டு தமிழகத்தில் விதவிதமான பொருட்களில் கஞ்சா அபின் உள்ளிட்ட போதை பொருட்கள் கிடைக்கிறது.
இதற்கு நேரடி காரணம் முதலமைச்சர் தான் பொறுப்பெடுக்க வேண்டும் ஏனென்றால் அவருக்கு கீழ் தான் தமிழக காவல்துறை இயங்கிக் கொண்டுள்ளது.
காவல்துறைக்கு தெரியாமல் யாராவது போதை பொருட்களை விற்க முடியுமா? தமிழகத்தில் காவல்துறை சுதந்திரமாக செயல்பட முடியவில்லை திமுக மாவட்ட செயலாளர்கள் கட்டுப்பாட்டில் காவல்துறை செயல்படுகிறது. குற்றவாளிகள் என யாரயாவது பிடித்தால் உடனே போன் செய்து அவர்கள் நம்ம ஆட்களை விட்டு விடுங்கள் என்று திமுக மாவட்ட செயலாளர்கள் சொல்கிறார்கள்.உதாரணம் அந்த திமுக நிர்வாகி சாதிக் பாரூக். அவர் 3000 கோடி ரூபாய்க்கு போதைப்பொருள் விற்றதாக கைது செய்யப்பட்டார். சமூக நீதி ஏன் வேண்டும்?
சுயமரியாதையுடன் நாம் வாழ வேண்டும் என்றால் அதற்கு சமூக நீதி கிடைக்க வேண்டும். வாழ்க்கையின் அடித்தளமே சமூக நீதிதான். இது ஏதோ ஒரு சமுதாயத்திற்கான பிரச்சினை கிடையாது; அனைத்து சமுதாயத்திற்கும் பொருந்தும்.. தமிழகத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டால்தான் தமிழ்நாட்டில் எந்தெந்த சமூகங்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது என்பதை கண்டறிய முடியும் அப்படி கண்டறிந்தால் தான் அவர்களுக்கான மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி அவர்களை வாழ்க்கையில் உயர்த்த முடியும். 1931 இல் எடுக்கப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை வைத்து தான் தற்போது வரை மக்கள் நலத்திட்டங்களை செய்து வருகிறார்கள்.பல ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு அடிப்படையில் இப்போது இட ஒதுக்கீடு கொடுப்பதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்.
தற்போது மக்களின் நிலை எவ்வாறு உள்ளது என்பதை கண்டறிந்து இட ஒதுக்கீடும் நலத்தட்ட உதவிகளும் கொடுக்கப்பட வேண்டும். இந்தியாவில் ஏழு மாநிலங்கள் சாதிவாரி கணக்கெடுப்பை எடுத்து விட்ட நிலையில் தமிழ்நாட்டு முதலமைச்சர் மட்டும் செய்ய மறுக்கிறார் காரணம் கேட்டால் எனக்கு உரிமை இல்லை என்று பொய் சொல்கிறார்” என்று அவர் பேசினார்.