For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

திமுக – காங். இடையே தொகுதிப் பங்கீடு உடன்பாடு இன்று கையெழுத்தாகிறது!

10:03 AM Mar 09, 2024 IST | Web Editor
திமுக – காங்  இடையே தொகுதிப் பங்கீடு உடன்பாடு இன்று கையெழுத்தாகிறது
Advertisement

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில்,  திமுக-காங்கிரஸ் இடையே தொகுதி ப் பங்கீடு உடன்பாடு இன்று கையெழுத்தாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.  தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

திமுகவுடன் தொகுதி பங்கீடு பற்றிய முதற்கட்ட பேச்சுவார்த்தை ஜனவரி 28 ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.  இந்த பேச்சுவார்த்தையில், டெல்லியில் இருந்து காங்கிரஸ் தலைவர்கள் முகுல் வாஸ்னிக்,  சல்மான் குர்ஷித் கலந்து கொண்டனர்.  இந்த ஆலோசனை கூட்டத்தில் 21 தொகுதிகள் அடங்கிய பட்டியலை திமுக தலைமையிடம் வழங்கி அதில் 14 தொகுதிகளை காங்கிரஸ் கேட்டிருந்தது.  இதையடுத்து,  திருவள்ளூர், கிருஷ்ணகிரி,  ஆரணி,  கரூர்,  திருச்சி,  சிவகங்கை,  தேனி,  விருதுநகர்,  கன்னியாகுமரி உள்ளிட்ட தொகுதிகளை கேட்டதாக கூறப்படுகிறது.

 இதையும் படியுங்கள் : சென்னையில் தொழிலதிபர்கள் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை..!

நெல்லை,  ராமநாதபுரம்,  தென்காசி,  திண்டுக்கல்,  திருவண்ணாமலை,  தஞ்சை, மயிலாடுதுறை,  பெரம்பலூர்,  கள்ளக்குறிச்சி,  காஞ்சிபுரம்,  அரக்கோணம், தென்சென்னை ஆகிய தொகுதிகளையும் கேட்டதாக கூறப்படுகிறது.  கடந்த தேர்தலில் வென்ற 9 தொகுதிகளுடன் கூடுதலாக 5 விருப்ப தொகுதிகளை சேர்த்து மொத்தமாக 12 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க திமுகவிடம் காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில்,  இன்று மாலை 4 மணியளவில் டெல்லியில் இருந்து காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை குழுவைச் சேர்ந்த  முகுல் வாஸ்னிக்,  அஜோய் குமார், சல்மான் குர்ஷித் ஆகியோர் சென்னை வருகின்றனர்.  அதனைத் தொடர்ந்து மாலை 6:00 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க-வுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.  அதனைத் தொடர்ந்து,  தி.மு.க - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
Advertisement