For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியின் வெற்றிக்காக பணிபுரிந்த PEN India நிறுவனத்திற்கு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நன்றி தெரிவித்துள்ளார்! 

08:20 PM Jun 05, 2024 IST | Web Editor
நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியின் வெற்றிக்காக பணிபுரிந்த pen india நிறுவனத்திற்கு தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா நன்றி தெரிவித்துள்ளார்  
Advertisement

நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 40க்கு 40 வென்றுள்ள நிலையில், அக்கூட்டணி வெற்றிக்கு உழைத்த PEN India நிறுவனத்திற்கு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நன்றி தெரிவித்துள்ளார். 

Advertisement

2021- ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் போது திமுகவிற்காக பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோரின் ‘ஐ-பேக்’ என்ற நிறுவனம் பணி புரிந்தது.

இந்த நிறுவனம் 2014 மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடிக்கும், 2015 பிஹார் சட்டப் பேரவைத் தேர்தலில் நிதிஷ்குமாருக்கும் தேர்தல் வியூக பணியை மேற்கொண்டது. இது அவர்களுக்கு வெற்றியையும் தேடி தந்தது.

இதனை தொடர்ந்து, சமூக வலைதளங்களின் தாக்கல் அதிகமாக இருக்கும் தற்போதைய சூழலில் தேர்தல் வியூக நிறுவனங்களின் தேவை அவசியமானதாக உருவெடுத்தது. இந்நிலையில், 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக PEN India நிறுவனம் களம் இறக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவு வெளியானது. அதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றிவாகை சூடின.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடர் வெற்றியை பெற்று வரும் திமுக குறித்து பாராட்டி PEN India ஒரு பதிவை தனது X தள பக்கத்தில் வெளியிட்டது.

அதில், 2019 மக்களவைத்தேர்தல், 2021 சட்டப்பேரவை தேர்தல், 2022 உள்ளாட்சித் தேர்தல், 2024 மக்களவைத் தேர்தல் ஆகியவற்றில் திமுகவின் வெற்றிகள் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், தேர்தல் களத்தில் திமுகவின் வெற்றிக்கு பணிபுரிந்த PEN India நிறுவனத்தை பாராட்டி, அக்கட்சியில் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளரும், தொழில் துறை அமைச்சருமான டி.ஆர்.பி.ராஜா நன்றி தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement