”திமுக கூறும் சமூக நீதி என்பது சமூக அநீதியே”- அண்ணாமலை விமர்சனம் !
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் 28ஆம் தேதி, திண்டிவனம் 20-வது வார்டு திமுக நகர மன்ற உறுப்பினர் ரம்யா ராஜா, அந்த அதிகாரியடம் தன் வார்டில் நடைபெற்ற பணிக்கான நிதி ஒதுக்குதல் தொடர்பாக கோப்பினை எடுத்து வர கேட்டுள்ளார். அதற்கு அவர் சரியான முறையில் பதில் அளிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நகர மன்ற உறுப்பினர் ரம்யா ராஜா அவரை ஒருமையில் திட்டியுள்ளார். மேலும் நகர மன்ற தலைவர் நிர்மலாவின் கணவர் ரவிச்சந்திரனிடம் முனியப்பன் குறித்து முறையிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து திண்டிவனம் நகராட்சி ஆணையர் அறைக்கு அந்த அதிகாரியை அழைத்த நகர மன்ற தலைவரின் கணவர் ரவிச்சந்திரன் ரம்யா ராஜாவிடம் மன்னிப்பு என்ற வார்த்தையை கேட்க சொல்லியிருக்கிறார். அப்போது அருகில் நின்றிருந்த அந்த அதிகாரி இருக்கையில் அமர்ந்திருந்த ரம்யா ராஜாவின் காலில் திடீரென விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பான காணொளிகள் இணையத்தில் பரவிய அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது.
இந்த நிலையில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இச்சம்வத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர், வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
”திண்டிவனத்தில் உள்ள பட்டியல் சாதி சமூகத்தைச் சேர்ந்த ஒரு பொது ஊழியர், திமுக கவுன்சிலரால் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும்படி கட்டாயப்படுத் தப்பட்டுள்ளார். திமுக அரசு ஊழியர்களை அவமானப்படுத்துவது இது முதல் முறையல்ல. முன்னதாக, திமுக அமைச்சர்ராஜ கண்ணப்பன் ஒரு அரசு ஊழியரை சாதிரீதியாக திட்டியிருந்தார். சமூக நீதி என்று திமுக கூறுவது உண்மையில் சமூக அநீதியைத் தவிர வேறில்லை”
என்று பதிவிட்டுள்ளார்.