ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக #DMK அறிவிப்பு!
02:08 PM Aug 14, 2024 IST | Web Editor
Advertisement
சுதந்திர தினத்தை ஒட்டிய ஆளுநர் ஆர்.என்.ரவியின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக அறிவித்துள்ளது.
Advertisement
ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழா முடிந்ததும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு ஆளுநர் தனது மாளிகையில் தேநீர் விருந்து வைப்பார் என்பதும் அந்த தேநீர் விருந்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் இந்த ஆண்டு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தில் ஏற்கனவே திமுகவின் கூட்டணி கட்சிகளான கம்யூனிஸ்ட், காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்த நிலையில் திமுகவும் புறக்கணிப்பதாக திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி தெரிவித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் அரசு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வது குறித்து இன்று மாலை முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார். மேலும் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இந்த தேநீர் விருந்தில் கலந்துகொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணி கட்சிகள் ஆளுநர் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. ஆனால், ஆளுநரின் தேநீர் விருந்தில் கலந்து கொள்வதாக அதிமுக அறிவித்துள்ளது. அதேபோல் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் தேநீர் விருந்தில் கலந்து கொள்ள உள்ளன.