For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நாடாளுமன்றத்தில் மக்களின் குரலாகத் திமுகவினரும் INDIA கூட்டணியினரும் எதிரொலிக்க... - முதலமைச்சர் மு.கஸ்டாலின்!

02:20 PM Mar 20, 2024 IST | Web Editor
நாடாளுமன்றத்தில் மக்களின் குரலாகத் திமுகவினரும் india கூட்டணியினரும் எதிரொலிக்க      முதலமைச்சர் மு கஸ்டாலின்
Advertisement

நாடாளுமன்றத்தில் மக்களின் குரலாகத் திமுகவினரும் INDIA கூட்டணியினரும் எதிரொலிக்க வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கவுள்ளது. இன்று (மார்ச் 20) முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. இதனால் கூட்டணி, தொகுதி பங்கீட்டை நிறைவு செய்ய அரசியல் கட்சிகள் தீவிரமாக பணிபுரிந்து வருகின்றன.

அந்த வகையில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்பதை உறுதி செய்துவிட்டதை தொடர்ந்து, கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதி என்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டது. வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, கோவை, தூத்துக்குடி உள்பட 21 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி புதுச்சேரி உள்பட 10 தொகுதிகளிலும், விசிக, சிபிஐ, சிபிஎம் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், மதிமுக, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் கொமதேகவிற்கு தலா 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

பிப் 5-ம் தேதி முதல் தொகுதி வாரியாக மக்களை சந்தித்து தயாரிக்கப்பட்ட தேர்தல் அறிக்கையை திமுகவின் துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இன்று வழங்கினார். இந்த தேர்தல் அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

இதுகுறித்து முதலமைசர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் தேர்தல் அறிக்கையில் முக்கியமான செயல்திட்டங்கள் குறித்த வீடியோவுடன், “தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, வெற்றி வேட்பாளர்களை அறிவித்திருக்கிறோம். நாடாளுமன்றத்தில் உங்களது குரலாகத் தி.மு.க.வினரும் INDIA கூட்டணியினரும் எதிரொலிக்க - ஒன்றியத்தில் நமது INDIA கூட்டணி ஆட்சி அமைந்து, தமிழ்நாட்டிற்கான வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டு வர நமது வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்!” என பதிவிட்டுள்ளார்.

Tags :
Advertisement