For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Chennai | இன்று முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம் | கிளாம்பாக்கத்தில் அமைச்சர்கள் ஆய்வு!

10:14 AM Oct 28, 2024 IST | Web Editor
 chennai   இன்று முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம்   கிளாம்பாக்கத்தில் அமைச்சர்கள் ஆய்வு
Advertisement

தீபாவளி சிறப்பு பேருந்துகள் இன்றுமுதல் இயக்கப்படும் நிலையில், கிளாம்பாக்கத்தில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை அமைச்சர்கள் சிவசங்கர், சேகர்பாபு உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

Advertisement

தீபாவளி பண்டிகைக்காக சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தங்கியிருக்கும் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊா்களுக்கு செல்வது வழக்கம். தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு வரும் அக்டோபர் 31ம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள நிலையில், தொடந்து 4 நாட்கள் விடுமுறையாக உள்ளது. இதனால் சென்னையிலிருந்து சொந்த ஊா்களுக்குச் செல்பவா்களின் வசதிக்காக 3 நாட்கள் அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இன்று முதல் தீபாவளி பண்டிகைக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இந்நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வெளியூர் புறப்பட்டுச் செல்லும் பயணிகளுக்கான முன்னேற்பாடுகளை அமைச்சர்கள் சிவசங்கர், சேகர்பாபு ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். இதையடுத்து, அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது,

"தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அரசுப் பேருந்துகள், ஒப்பந்த அடிப்படையிலான தனியார் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் ஆகியவற்றை நிறுத்திவைக்க போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கிளாம்பாக்கத்தில், மாநகர பேருந்து நிறுத்தும் இடத்தில் இருந்து வெளியூர் பேருந்துகள் புறப்படும் இடத்துக்கு இடையே, 8 மின்சார பேருந்துகளும், மாநகர இணைப்புப் பேருந்துகளும் இயக்கப்படும். டிஜிட்டல் பலகை, ஒலிபெருக்கி மூலம் பேருந்து இயக்க விவரத்தை அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2,000 பயணிகள் அமரும் வகையில் இருக்கைகள், இலவச மருத்துவமனை, அவசர கால ஊர்தி, பாதுகாப்புக்காக காவல் அதிகாரிகள், 3 மடங்கு அதிகமாக தூய்மைப் பணியாளர்கள், 8 ஏடிஎம் இயந்திரங்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் 18 இயந்திரங்கள், தாய்மார்கள் பாலூட்ட 3 அறைகள், 140 தங்குமிடம் போன்ற பயணிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள் : #TVKMaanadu | தவெக தலைவர் விஐய்க்கு திரைப்பிரபலங்கள் வாழ்த்து!

சொந்த வாகனங்களில் செல்வோர் பெருங்களத்தூர் வழியாக செல்வதைத் தவிர்த்து, திருப்போரூர் - செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளிவட்டச் சாலை வழியாக செல்லும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனியார் முன்பதிவு செயலிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளின் இயக்கம் நிறுத்தப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும்"

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதையடுத்து உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,

பிரத்யேக உதவி எண்கள் : 7845700557, 7845727920, 7845740924.

அரசுப் பேருந்துகள் விவரம், புகார் - 94450 14436

ஆம்னி பேருந்துகள் புகார் - 044 2474 9002, 2628 0445, 2628 1611

Tags :
Advertisement