For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Madurai | களைகட்டிய தீபாவளி பண்டிகை வியாபாரம் - கடை வீதிகளில் குவிந்த பொதுமக்கள்!

03:22 PM Oct 20, 2024 IST | Web Editor
 madurai   களைகட்டிய தீபாவளி பண்டிகை வியாபாரம்   கடை வீதிகளில் குவிந்த பொதுமக்கள்
Advertisement

தீபாவளி விற்பனை களைகட்ட தொடங்கிய நிலையில், மதுரையில் கடைவீதிகளில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.

Advertisement

நாடு முழுவதும் முக்கிய பண்டிகையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு அக்டோபர் மாதம் 31-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில் பொதுமக்கள் அனைவரும் தீபாவளி பண்டிகைக்கு தேவையான ஆடைகள், பட்டாசுகள், இனிப்பு வகைகள் போன்ற பொருட்களை வாங்கி வருகின்றனர்.

அந்த வகையில், மதுரையில் உள்ள 4 மாசி வீதிகள், விளக்குத்தூண், கீழவாசல், காமராஜர் சாலை பைபாஸ் சாலை, அண்ணாநகர் உள்ளிட்ட கடைவீதிகளில் தீபாவளி பண்டிகைக்கு தேவையான ஆடைகள், நகைகள், பட்டாசுகள், வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்டவைகளை வாங்குவதற்காக தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வருகை தர தொடங்கினர்.

தீபாவளி விற்பனை காரணமாக மாசி வீதிகள் முழுவதிலும் பொதுமக்கள் குவிந்துள்ளனர். கடை வீதிகளில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கண்காணிப்பு கோபுரம் மூலமாக காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள் : INDvsNZ முதல் டெஸ்ட் | இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றி!

இன்று விடுமுறை நாள் என்பதால் ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கு தேவையான பொருட்களை வாங்க கடை வீதிகளுக்கு வருகின்றனர். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்காக ஏராளமான புதிய ரக ஆடைகள் , புதிய வடிவிலான நகைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவை விறுவிறுப்புடன் விற்பனையாகி வருகிறது.

Tags :
Advertisement