For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தீபாவளி பண்டிகை : சென்னை - தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில்..!

08:46 PM Nov 08, 2023 IST | Jeni
தீபாவளி பண்டிகை   சென்னை   தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில்
Advertisement

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை- தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Advertisement

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சென்னை - தூத்துக்குடி இடையே சிறப்பு ரயிலை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி வரும் நவம்பர் 10 மற்றும் 12-ம் தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்து இரவு 11:45 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயிலானது செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக மறுநாள் மதியம் 12:30 மணி அளவில் தூத்துக்குடி சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : தீபாவளியை முன்னிட்டு சென்னையில் ஆம்னி பேருந்துகளின் வழித்தடங்கள் மாற்றம்..!

மறுமார்க்கம் வரும் நவம்பர் 11 மற்றும் 13-ம் தேதிகளில் தூத்துக்குடியில் இருந்து புறப்படும் இந்த சிறப்பு ரயிலானது, மறுநாள் அதிகாலை 4:45 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடைகிறது. மேலும் இந்த சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு விரைவில் தொடங்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement