தீபாவளி கறி விருந்து! சென்னையில் இறைச்சி விற்பனை அமோகம்!!
தீபாவளி பண்டிகை முன்னிட்டு சென்னை, சிந்தாதிரிப்பேட்டை இறைச்சி சந்தையில் இறைச்சி வாங்க பொதுமக்களின் கூட்டம் அலைமோதுகிறது.
நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகை நாளில் எண்ணெய் தேய்த்து குளித்து விட்டு புத்தாடை அணிந்து கொண்டு இட்லி, கறிக்குழம்பு சமைத்து சாப்பிடுவது பலரது வீடுகளில் வழக்கம்.
இதையும் படியுங்கள்:தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை சற்று அதிகரிப்பு!
மேலும் மீன், ஆடு, கோழி போன்ற பல்வேறு இறைச்சி சமைப்பது வழக்கமாக காணப்படுகிறது. இதனை ஒட்டி சென்னை சிந்தாதிரிப்பேட்டை இறைச்சி மார்க்கெட்டில் இறைச்சி வாங்க பொதுமக்களின் கூட்டமானது அலைமோதி வருகிறது.
இந்நிலையில், ஒரு கிலோ ஆட்டு இறைச்சி நேற்று 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 60 ரூபாய் மட்டும் அதிகரித்து 860 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கோழி இறைச்சி 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் 20 ரூபாய் அதிகரித்து 200 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது.
எல்லா வகையான மீன்களும் 20 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை அதிகரிதுள்ளது. பண்டிகை காலங்களில் இறைச்சியின் விலையானது அதிகரித்து காணப்படுவது வழக்கம் ஆனால் தற்போது இறைச்சியின் விலையில் பெரிய மாற்றம் இல்லை என விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.