ஊழல் புகாரில் குலசேகரபட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம்... மாவட்ட ஆட்சியர் அதிரடி!
ஊழல் புகாரில் தென்காசி, குலசேகரபட்டி ஊராட்சி மன்ற தலைவரை பதவி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் உத்தரவிட்டுள்ளார்.
தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட குலசேகரபட்டி ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வந்தவர் முத்துமாலையம்மாள். இவர் அந்த ஊராட்சியில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு, அரசு நிதியை பெருமளவு இழப்பீடு செய்ததாக தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவருக்கு தொடர் புகார்கள் வந்தன.
இதனையடுத்து இது தொடர்பாக விசாரணை நடத்த தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர்
கமல் கிஷோர் உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் முத்துமாலையம்மாள் முறைகேட்டில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரை பணி நீக்கம் செய்து கமல் கிஷோர் உத்தரவிட்டுள்ளார்.
கீழப்பாவூர் ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட ஆவுடையானூர் ஊராட்சி தலைவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இதே ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் மற்றுமொரு ஊராட்சி மன்ற தலைவர் ஊழல் புகாரில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.