Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"வேடிக்கை பார்ப்பவர்களை விவாதிப்பது வெட்டி பேச்சு" - ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

பெரிய கட்சி என்று சொல்லும் திமுகவால் ஒரு மேயரை கூட நியமிக்க முடியவில்லை என்று ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
11:08 AM Oct 21, 2025 IST | Web Editor
பெரிய கட்சி என்று சொல்லும் திமுகவால் ஒரு மேயரை கூட நியமிக்க முடியவில்லை என்று ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
Advertisement

மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "திமுக ஆட்சியில் சொல்வது ஒன்று செய்வது ஒன்று, சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தமில்லை என தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் குரல் கொடுத்து வருகிறார். Foxconn நிறுவனத்தால் வேலைவாய்ப்பு கிடைக்கும் என தொழில்துறை அமைச்சர் TRB ராஜா பெருமையோடு தெரிவித்தார். முதலமைச்சரும், அமைச்சரும் மாற்றி, மாற்றி பெருமை பேசினார்கள். ஆனால் பூனைக்குட்டி வெளியே வந்தது போல் தமிழகத்தில் Foxconn நிறுவனம் முதலீடு செய்யவில்லை என அந்நிறுவனம் மறுத்துள்ளது.

Advertisement

கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல் முழு பூசணிக்காயை சோற்றில் வைத்து மறைந்துள்ளார் அமைச்சர் TRB ராஜா. அதிமுக ஆட்சியில் எல்லா புயல்களையும் சிறப்பாக கையாண்டோம். தேனியில் பெய்த மழையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு அமைச்சர் கூட நேரில் சென்று பார்க்கவில்லை. மதுரை மேயர் ராஜினாமா செய்துள்ளார். பெரிய கட்சி என்று சொல்லும் திமுகவால் ஒரு மேயரை கூட நியமிக்க முடியவில்லை. 4 மாமன்ற உறுப்பினர்கள் உள்ள கம்யூனிஸ்ட் வசம் மாநகராட்சி சென்றுவிட்டது.

தமிழ்நாட்டில் எத்தனை இடங்கள் பாதிக்கப்படும், தாழ்வான பகுதிகள் எத்தனை என்பதை கண்டறிய வேண்டும், 3 மாதம் என்ன செய்து கொண்டிருந்தார்கள். வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் கட்டுப்பாட்டு மையத்தில் சென்று எல்லாம் நன்றாக உள்ளது என முதலமைச்சர் சொல்வதால் தான் பயமாக உள்ளது. டிடிவி தினகரன் முதலமைச்சரை புகழ்வது குறித்த கேள்விக்கு, ஓட்டப்பந்தயத்தில் ஓடுபவர்களை பற்றி பேச வேண்டும், வேடிக்கை பார்ப்பவர்களை விவாதிப்பது வெட்டி பேச்சு, வெறும் பேச்சு என்று தெரிவித்துள்ளார்.

Tags :
ADMKDMKFoxconnMaduraiMKStalinR.P. Udayakumar
Advertisement
Next Article