துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி நடிக்கும் படத்திற்கு 'கருடன்' எனப் பெயரிடப்பட்டுள்ளது
05:33 PM Jan 19, 2024 IST | Web Editor
Advertisement
துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி நடிக்கும் படத்திற்கு 'கருடன்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. சசிக்குமார், உன்னிமுகுந்தன் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக நடித்து வந்த சூரியை வெற்றிமாறன் விடுதலை திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக ஆக்கினார். அந்த படத்தை தமிழ் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டதை அடுத்து சூரி தொடர்ந்து கதாநாயகனாகவே சில படங்களில் நடித்து வருகிறார்.
விடுதலை 2 மற்றும் கொட்டுக்காளி ஆகிய படங்களை முடித்த சூரி அடுத்து நடிக்கும் கருடன் படத்தை இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்குகிறார்.. இந்த படத்துக்குக் கதையை இயக்குனர் வெற்றிமாறன் எழுதியுள்ளார். இந்த படத்தில் சூரியுடன் முக்கிய வேடங்களில் சமுத்திரக்கனி மற்றும் சசிகுமார் நடித்துள்ளனர்.
Advertisement
இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்துள்ளதாக சூரி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் சூரி அறிவித்துள்ளார். இந்த படம் மார்ச் 29 ஆம் தேதி ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் கிளிம்ஸ் வீடியீவை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.