Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திண்டுக்கல் - பள்ளி சத்துணவு கூட பூட்டை உடைத்து முட்டையை ஆம்லேட் போட்டு உண்ட அடையாளம் தெரியாத நபர்!

10:02 PM Jan 22, 2024 IST | Web Editor
Advertisement

திண்டுக்கல் மாவட்டத்தில் விடுமுறை நாட்களை பயன்படுத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி சத்துணவு கூடத்திற்குள் புகுந்து அடையாளம் தெரியாத நபர்கள் முட்டைகளை ஆம்லேட் போட்டு உண்ட நிகழ்வு சர்ச்சையாகியுள்ளது. 

Advertisement

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த சுட்டிகாலாடிபட்டி கிராமத்தில்
உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள்
படித்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் அந்த கிராமத்தைச் சேர்ந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் பள்ளியின் காம்பௌண்ட் சுவர் தாண்டி குதித்து உள்ளே சென்றுள்ளனர்.

இதையடுத்து, சத்துணவு கூட சமையலறையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று குழந்தைகளுக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட சத்துணவு
முட்டைகளையும் எண்ணெய்,மசாலா பொடிகளை பயன்படுத்தி அங்கிருந்த அடுப்பில் ஆம்லெட் போட்டு மது அருந்தியதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள் : அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் 2-வது முறையாக மனு தாக்கல்!

இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல சமயலறையைத் திறக்க சென்ற பணியாளர்கள் சத்துணவு முட்டைகள் திருடப்பட்டு ஆம்லெட் போட்டு மது அருந்தியது அலங்கோலமாக காட்சியளித்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பணியாளர்கள் தங்களது மேலிட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் விடுமுறை நாளில் அத்துமீறி பள்ளியில் உள்ளே நுழைந்து குழந்தைகளுக்காக வைக்கப்பட்டிருந்த சத்துணவுமுட்டைகளை திருடி ஆம்லெட் போட்டு மது அருந்தியது பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
CanteenChuttikaladipatti villageDindigulDrugsSchool
Advertisement
Next Article