For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“17 மாதங்கள் சிறையில் இருப்பேன் என நினைக்கவில்லை” - மதுபான கொள்கை வழக்கு குறித்து #ManishSisodia பேட்டி!

06:31 PM Aug 14, 2024 IST | Web Editor
“17 மாதங்கள் சிறையில் இருப்பேன் என நினைக்கவில்லை”   மதுபான கொள்கை வழக்கு குறித்து  manishsisodia பேட்டி
Advertisement

மதுபான கொள்கை வழக்கில் 17 மாதங்கள் சிறையில் இருப்பேன் என நினைக்கவில்லை என டெல்லியின் முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

Advertisement

டெல்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லியின் முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா மீது அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ தொடர்ந்த இரண்டு வழக்குகளிலும் ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி தீர்ப்பளித்தது.

இந்நிலையில், 17 மாதங்கள் சிறையில் இருப்பேன் என தான் ஒருபோதும் எண்ணவில்லை என அவர் தெரிவித்துள்ளார். டெல்லி திகார் சிறையிலிருந்து கடந்த 9-ம் தேதி ஜாமீனில் வெளிவந்த அவர் ஊடக நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :

“அரசியலில் ஒருவர் மீது மற்றொருவர் குற்றச்சாட்டுகளை சுமத்துவது இயல்பு தான். அதே நேரத்தில் ஒரு தனிநபரை சிறைக்கு அனுப்புவது அல்லது கைது செய்வதற்கு பின்னால் நிச்சயம் ஏதேனும் ஒரு காரணம் இருக்கும் என நான் கருதுகிறேன். மாற்றத்துக்கான அரசியலில் இது தவிர்க்க முடியாத ஒன்று. அந்த வகையில் மனதளவில் நான் இது மாதிரியான சூழலுக்கு என்னை தயார் செய்து வைத்திருந்தேன்.

இருந்தாலும் மதுபான கொள்கை வழக்கில் நான் 17 மாதங்கள் சிறையில் இருப்பேன் என நினைக்கவில்லை. பண மோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் என்னை கைது செய்தனர். இதன் மூலம் என்னை நீண்ட காலம் சிறையில் அடைத்து வைப்பது தான் அவர்கள் திட்டம். தீவிரவாதிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் மாஃபியாக்களுக்கு நிதியுதவி செய்வதை தடுக்கும் இந்த சட்டத்தின் கீழ் என்னை கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன. இந்த சட்டத்தின் கீழ் கைதானவர்கள் ஜாமீன் பெறுவது கடினமான காரியம்.

இதையும் படியுங்கள் : உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட #MPATGM ஏவுகணை : 2-வது முறையாக சோதனை வெற்றி!

சிறையில் இருந்தபோது நாள் ஒன்றுக்கு சுமார் 15 மணி நேரம் வரை சிறை அறையில் இருக்க வேண்டும். யாருடனும் பேச முடியாது. அதனால் எனக்கு நானே நண்பனாக அந்த நேரத்தில் இருந்து கொண்டேன். நான் சிறையில் இருந்து வெளிவந்து சில நாட்கள் தான் ஆகிறது. கட்சியிலும், ஆட்சியிலும் எனது பங்கு என்ன என்பது குறித்து கட்சியின் தலைமை தான் முடிவு செய்யும். விரைவில் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளி வருவார்”

இவ்வாறு மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement