Note : This story was originally published by ‘Vishvas News’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.
“ஜெய்ப்பூரில் இரண்டு எரிவாயு டேங்கர்கள் தீப்பிடித்து எரிந்து பெரும் விபத்து ஏற்பட்டதா?”
ஜெய்ப்பூரில் இரண்டு எரிவாயு டேங்கர்கள் தீப்ப்டித்து எரிந்து, பெரும் வெடிப்புக்கு வழி செய்தது என வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
10:45 AM Feb 12, 2025 IST | Web Editor
Advertisement
This News Fact Checked by ‘Vishvas News’
Advertisement
இரண்டு எரிவாயு டேங்கர்கள் தீப்பிடித்து எரிவதையும், பின்னர் ஒரு வெடிப்பைக் காட்டும் ஒரு காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. சில பயனர்கள் இந்த காணொளியைப் பகிர்ந்து இந்த காணொளி ஜெய்ப்பூரிலிருந்து வந்தது என்றும், அங்கு மீண்டும் ஒரு விபத்து நடந்துள்ளதாகவும் கூறுகின்றனர்.
இதுகுறித்த விசாரணையில், வைரலான காணொளி ஜெய்ப்பூரிலிருந்து அல்ல, மாறாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள தேரா காசி கானிலிருந்து வந்தது என தெரியவந்தது. இந்த சம்பவம் 2025ம் ஆண்டு நடந்தது, இது இப்போது ஜெய்ப்பூரிலிருந்து வந்தது என்று கூறி தவறாக சித்தரிக்கப்படுகிறது. இந்த காணொளிக்கும் இந்தியாவுக்கும் ஜெய்ப்பூருக்கும் எந்த தொடர்பும் இல்லை.
வைரல் பதிவு:
'அக்ரம் பாய்' என்ற பேஸ்புக் பயனர் பிப்ரவரி 8, 2025 அன்று இந்த வைரல் பதிவைப் பகிர்ந்து, “அஸ்ஸலாமு அலைக்கும்” என்று பதிவிட்டிருந்தார்.
"ஜெய்ப்பூரில் மீண்டும் ஒரு பெரிய விபத்து முன்பு நடந்தது"
வைரல் காணொளியின் காப்பக இணைப்பை இங்கே காணலாம்.
உண்மை சரிபார்ப்பு:
வைரலான காணொளியின் உண்மையைக் கண்டறிய, இன்விட் கருவியின் உதவியுடன் காணொளியின் பல முக்கிய பிரேம்களைப் பிரித்தெடுத்து, கூகுள் லென்ஸின் உதவியுடன் அவற்றைத் தேடியதில், 24 நியூஸ் HD இன் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் வைரலான காணொளி கிடைத்தது. இந்த காணொளி ஜனவரி 28, 2025 அன்று பதிவேற்றப்பட்டது. காணொளியுடன் கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி, இந்த காணொளி பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் தேரா காசி கான் மாவட்டத்தைச் சேர்ந்தது.
தேடலின் போது, ARY News இன் அதிகாரப்பூர்வ YouTube சேனலில் வீடியோ தொடர்பான ஒரு அறிக்கை கிடைத்தது. ஜனவரி 28, 2025 அன்று பதிவேற்றப்பட்ட வீடியோவுடன் கொடுக்கப்பட்ட தகவலின்படி, LPG கொள்கலனில் ஏற்பட்ட வெடிப்பு பற்றிய இந்த வீடியோ பாகிஸ்தானின் தேரா காசி கானில் இருந்து எடுக்கப்பட்டது.
ரேடார் ஆப்பிரிக்காவின் சரிபார்க்கப்பட்ட ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் வீடியோ தொடர்பான ஒரு பதிவு கிடைத்தது. ஜனவரி 29, 2025 அன்று வெளியிடப்பட்ட அந்த பதிவில், பாகிஸ்தானின் கோட்டா சுட்டாவில் எல்பிஜி டேங்கர் வெடித்த வீடியோ என்றும், அதில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 2 பேர் காயமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
At least one person has died and two others injured following an LPG tanker explosion in Kota Chutta, Pakistan. pic.twitter.com/Rd6egVtFIw
— Radar Africa (@radarafricacom) January 29, 2025