Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

உ.பி மாநிலத்தில் அம்பேத்கரின் கருத்துக்கள் அடங்கிய பலகையை போலீசார் சேதப்படுத்தினரா? - வைரலாகும் செய்தி | #FactCheck

உ.பி மாநிலம் எட்டாவில் சட்டமேதை அம்பேத்கரின் படம் மற்றும் கருத்துக்கள் இடம்பெற்ற பலகையை போலீசார் அழிப்பதாக சமூக வலைதளங்களில் செய்தி வைரலானது.
03:50 PM Jan 14, 2025 IST | Web Editor
featuredImage featuredImage
Advertisement

This News Fact Checked by ‘India Today’

Advertisement

உத்தர பிரதேசத்தில் உள்ள எட்டாவைச் சேர்ந்தவர் என சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகிறது, அதில் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கரின் படம் பொறிக்கப்பட்ட பலகையை போலீசார் துணியால் தேய்க்கும் காட்சியை காணமுடிகிறது. சாலையில் நிறுவப்பட்டுள்ள இந்தப் பலகையில், அம்பேத்கர் படத்துடன், "உங்கள் காலில் காலணிகள் இல்லாமல் இருக்கலாம், ஆனால் கண்டிப்பாக உங்கள் கைகளில் புத்தகம் இருக்க வேண்டும்" என்று எழுதப்பட்டுள்ளது. இந்த வீடியோவைப் பகிர்ந்த  பயனர்கள், அம்பேத்கரின் படமும் கருத்துக்களும் இடம்பெற்றிருந்த பலகையை போலீஸார் அகற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து X இல் வீடியோவைப் பகிர்ந்த ஒரு பயனர் “ஏடா... தோடல்பூர் கிராமத்தில் உள்ள பலகையில், “உங்கள் காலில் காலணிகள் இல்லாமல் இருக்கலாம், ஆனால் உங்கள் கையில் ஒரு புத்தகம் இருக்க வேண்டும்” என்று எழுதி வைத்திருந்தனர் அதனை உ.பி காவல்துறை அகற்றியுள்ளனர்” என எழுதியிருந்தார்.

டிசம்பர் 2024 இல் நடந்த இந்த சம்பவத்தில், போர்டில் எழுதப்பட்ட செய்தியை போலீசார் அழிக்கவில்லை என்பதை ஆஜ் தக் உண்மை சரிபார்ப்பு கண்டறிந்துள்ளது. மாறாக, சமூக விரோதிகள் சிலர்  இந்த பலகையில் பெயிண்ட் அடித்தனர், அதை போலீசார் அழித்து சுத்தம் செய்தனர் என்பதை ஆஜ்தக் கண்டறிந்துள்ளது.

உண்மை சரிபார்ப்பு : 

வைரல் வீடியோவின் கீஃப்ரேம்களைத் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலின் மூலம், தேடியபோது டிசம்பர் 26, 2024 தேதியிட்ட Instagram பக்கத்தில் அதன் அசலான பதிவைக் கண்டோம். அதன் தலைப்பில் காவல்துறையினரைப் பாராட்டியுள்ளனர். இந்த காணொளியின் ஆரம்பத்தில் பலகையில் பெயிண்ட் போன்ற ஒன்று காணப்பட்டது, மேலும் போலீசார் அதை சுத்தம் செய்வதை காணலாம்.

இதேபோல முக்கிய வார்த்தைகள் மூலம் தேடும் போது டிசம்பர் 21, 2024 தேதியிட்ட ஒரு ட்வீட் கிடைத்தது. அதில் பலகை முழுவதும் பெயிண்ட் பூசப்பட்டிருப்பதைக் காணலாம். இந்த இடுகையில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி, எட்டா மாவட்டத்தின் சாகித் காவல் நிலையப் பகுதியின் தோடல்பூர் கிராமத்தில் நிறுவப்பட்ட இந்த பலகையில் அம்பேத்கர் படம் மற்றும் கருத்து இடம்பெற்றிருந்தது. அதனை சமூக விரோதிகள் சிலர் பெயிண்ட் பூசியுள்ளனர்.

இதனால், கிராம மக்கள் மத்தியில் கடும் கோபம் ஏற்பட்டு, அவர்கள் அளித்த புகாரின் பேரில், போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இந்த இடுகைக்கு பதிலளிக்கும் விதமாக, எட்டா காவல்துறை சுத்தம் செய்யப்பட்ட பலகையுடன் காவலர்களின் படத்தைப் பகிர்ந்துள்ளது மற்றும் உள்ளூர் காவல்துறை போர்டில் உள்ள நிறத்தை அகற்றியதாக எழுதியது.

இந்த சம்பவம் தொடர்பான ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தியின்படி, சப்ராய் மார்க்கில் அமைந்துள்ள தவுடல்பூர் கிராமத்தை அடையாளம் காண கிராமத்திற்கு வெளியே ஒரு பலகை நிறுவப்பட்டுள்ளது. இந்த பலகையை சேதம் செய்யும்  மூன்றாவது சம்பவம் இதுவாகும். சேதப்படுத்தப்பட்ட அந்த பலகையை போலீசார்தான் சரி செய்ததாக இந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. போர்டில் எழுதப்பட்ட செய்தியை போலீசார் அழித்து விடுவார்கள் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து நாங்கள் சாகித் காவல் நிலைய சிஓ கிருஷ்ணா முராரி டோஹ்ராவைத் தொடர்பு கொண்டோம். ஆஜ் தக்குடன் பேசிய அவர்,  டிசம்பர் 21, 2024 அன்று காலையில் பீம்ராவ் அம்பேத்கரின் படம் இடம்பெற்ற பலகையை சேதப்படுத்தியதாகவும், அதன் மீது பெயின்ட் பூசப்பட்டதாகவும் காவல்துறைக்கு புகார் வந்ததாகக் கூறினார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தாங்களே போர்டை சுத்தம் செய்ததாக தெரிவித்தார்.

மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் யார் என்பது இன்னும் தெரியவில்லை, ஆனால் போர்டு இப்போது வலையால் மூடப்பட்டுள்ளது மற்றும் கண்காணிப்புக்காக சிசிடிவி கேமராக்களும் நிறுவப்பட்டுள்ளன என்று கிருஷ்ணா முராரி கூறினார்.

முடிவு : 

உ.பி மாநிலம் எட்டாவில் சட்டமேதை அம்பேத்கரின் படம் மற்றும் கருத்துக்கள் இடம்பெற்ற பலகையை போலீசார் அழிப்பதாக சமூக வலைதளங்களில் செய்தி வைரலானது. எட்டாவில் நிறுவப்பட்ட பீம்ராவ் அம்பேத்கரின் போர்டில் இருந்த செய்தியை போலீசார் அழிக்கவில்லை, ஆனால் அதில் பூசப்பட்ட பெயிண்ட்டை சுத்தம் செய்தனர் என்பது தெளிவாகிறது.

Note : This story was originally published by ‘India Today’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
AmbedkarEttaPoliceuttar pradeshviral video
Advertisement