Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பசுமாட்டை கிண்டல் செய்ததற்காக இளைஞரை போலீசார் தாக்கினார்களா? - #FactCheck

06:40 PM Nov 24, 2024 IST | Web Editor
Advertisement

This news is Fact Checked by Aajtak

Advertisement

பசுமாட்டை கிண்டல் செய்ததற்காக இளைஞர் ஒருவரை போலீஸார் தாக்கினார் என சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலானது. இதுகுறித்த உண்மைத் தன்மையை விரிவாக காணலாம்.

பசு மாட்டை முன்வைத்தும் , மாட்டிறைச்சி தொடர்பாகவும் பலநேரங்களில் பொய்ச் செய்திகள் அதிகமாக பரபப்பப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இவை வன்முறைக்கும் காரணமாக அமைகிறது. இந்நிலையில், பசுக்கள் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இரண்டு படங்களை கொண்ட தொகுப்புடன் ஒரு வீடியோ அவை இடம்பெற்றிருந்தது.

வீடியோவின் முதல் படத்தில் ஒரு இளைஞன் கார் கண்ணாடியின் வழியாக பசுமாட்டை பார்த்து சிரித்துக்கொண்டே “ ஜாக்கிரதை! அஸ்ஸலாமு அலைக்கும்.” எனவும் இரண்டாவது படத்தில் ஒரு இளைஞன் போலீஸ்காரர் முன் மண்டியிடும் படமும் இடம்பெற்றிருந்தது. மேலும், அதே படத்தொகுப்பில் இடம்பெற்ற மற்றொரு வீடியோவில், துப்பாக்கி ஏந்திய சில போலீஸ்காரர்களால் முன் ஒரு இளைஞன் அம்மா.. அம்மா என்று திரும்பத் திரும்பக் கூறுவதையும் கேட்கலாம்.

இந்த வீடியோவில் 'முஸ்லீம்' இளைஞன் சரியாக நடக்கக்கூட முடியாத வகையில் பசுவை கேலி செய்ததற்காக காவல்துறையினரால் தாக்கப்பட்டதாக கூறுகிறது. ஒரு பேஸ்புக் பயனர் வைரலான வீடியோவைப் பகிர்ந்து , முதல் படத்தொகுப்பின் மேல் இந்தியில், "பையன் பிடிபடும் அளவுக்கு வீடியோவைப் பகிரவும்" என்று எழுதினார். மேலும் இரண்டாவது படத்தொகுப்பில் சிறுவன் பிடிபட்டதாக குறிப்பிட்டு பாபாஜியின் சிகிச்சையைப் பாருங்கள்" என்று எழுதியிருந்தார். பாபாஜி என்பது உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை குறிக்கிறது.

உண்மை சரிபார்ப்பு :

வைரலான வீடியோவை இந்தியா டுடே ஃபேக்ட் செக் குழு சரிபார்த்தது. அதன்படி மாடுகளை கேலி செய்யும் வைரலான வீடியோவின் முதல் கிளிப்புக்கும், காவல்துறை நடவடிக்கை எடுக்கும் இரண்டாவது கிளிப்பில் இருக்கும் போட்டோவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கண்டறிந்துள்ளது.

வைரல் வீடியோவின் நம்பகத்தன்மையைக் கண்டறிய, அந்த வீடியோவிலிருந்து பல கீஃப்ரேம்களை எடுத்து கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் தேடலுக்கு உட்படுத்தியபோது அந்த வீடியோவின் கமெண்ட் பிரிவில் பலர் அந்த வீடியோவில் இருக்கும் இளைஞன் ஒரு முஸ்லீம் அல்ல, ஒரு இந்து என்றும் அவன் பெயர் நகுல் என்றும் கூறியுள்ளனர். வீடியோ பதிவிட்ட பிறகு கமெண்ட்களை படித்த, பின்னர் அந்த வீடியோவை தனது கணக்கில் இருந்து நீக்கிவிட்டு, மக்களிடம் மன்னிப்பு கேட்டு மற்றொரு வீடியோவை வெளியிட்டார்.

தொடர்ந்து தேடுதலில் இந்த ஆண்டு செப்டம்பர் 23 அன்று மற்றொரு இன்ஸ்டாகிராம் கணக்கில் அதே கிளிப் கிடைத்தது . நகுல் என்ற ஒருவரின் இன்ஸ்டாகிராம் கணக்கின் ஸ்கிரீன் ஷாட்டும் கிளிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. அந்த கணக்கைக் கண்காணிக்க முயலும்போது தற்போது நகுலின் கணக்கு நீக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அவரது கணக்கிலிருந்து மாட்டை கேலி செய்த வீடியோ வெளியிடப்பட்டதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது, இருப்பினும் கணக்கு இப்போது நீக்கப்பட்டிருப்பதால் உறுதியாகக் கூற முடியவில்லை. ஆனால், மாடுகளுடன் கேலி செய்ததற்காக நகுல் மீதோ அல்லது வேறு யார் மீதோ போலீசார் நடவடிக்கை எடுத்தது குறித்து எங்கள் தேடுதலில் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

வைரஸ் வீடியோவின் இரண்டாவது படத்தொகுப்பில் பயன்படுத்தப்பட்ட காவல்துறையின் முன் அமர்ந்திருக்கும் இளைஞனின் படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலுக்கு உட்படுத்தியபோது அதன் முடிவில் ஜூலை 1, 2023 வெளியான செய்திகளை காட்டியது. அதில், “குர்கான்-பரிதாபாத் சாலையில் அமைந்துள்ள ஹனுமான் கோயில் அருகே இறைச்சித் துண்டுகளை வீசியதாக குற்றம் சாட்டப்பட்ட 9 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்களில் ஒபிருல் மற்றும் நதீம் என்ற இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தவிர, அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்ட இருவரின் புகைப்படமும் உள்ளது. படத்தை உற்று நோக்கினால் வைரலாகும் வீடியோவில் போலீஸ் முன் அமர்ந்திருக்கும் இளைஞனின் படம் இந்தப் படத்தில் இருந்துதான் எடுக்கப்பட்டது என்பது தெளிவாகிறது.

வைரலான வீடியோவில் அம்மா , அம்மா என்று இளைஞன் திரும்பத் திரும்பச் சொல்லும் க்ளிப்பின் உண்மைத் தன்மையை கண்டறிய, வீடியோவின் இரண்டாவது கிளிப்பில் இருந்து பல ஸ்கிரீன் ஷாட்களை ரிவர்ஸ்-இமேஜில் தேடினோம். அது 28 அக்டோபர் 2022 அன்று, நியூஸ்18 செய்தியின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் இதே கிளிப்பைக் கொண்ட வீடியோ கிடைத்தது . பசு கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் சோனு @ இர்ஷாத் என்ற இளைஞரை கைது செய்ய காசியாபாத் போலிசார் சென்றிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்ற அவர், போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். பதிலுக்கு போலீசாரும் துப்பாக்கியால் சுட தோட்டா சோனுவின் காலில் பட்டது. காயம் அடைந்த உடனேயே, 'அம்மா' என்று சோனு திரும்பத் திரும்பச் சொல்ல ஆரம்பித்ததாக அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

முடிவு

மாட்டை கேலி செய்ததற்காக முஸ்லிம் இளைஞனை போலீசார் அடித்து உதைக்கும் வீடியோ காட்சிகள் வெளியானது. இப்படத்தின் இரண்டாவது க்ளிப்பில் இடம்பெற்ற படம் வைரலான வீடியோவில் உள்ள மாட்டை கிண்டல் செய்ததாக பரப்பப்படும் படத்துக்கும் எவ்விதம் சம்பந்தமும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

Note : This story was originally published by Aajtak and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
beatCowFact CheckPoliceviral clip
Advertisement
Next Article