For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மகாராஷ்டிரா துலே தொகுதியில் தோல்வி அடைந்த காங்கிரஸ் வேட்பாளர் மறு எண்ணிக்கையில் வெற்றி பெற்றாரா? உண்மை என்ன?

08:24 AM Jun 08, 2024 IST | Web Editor
மகாராஷ்டிரா துலே தொகுதியில் தோல்வி அடைந்த காங்கிரஸ் வேட்பாளர் மறு எண்ணிக்கையில் வெற்றி பெற்றாரா  உண்மை என்ன
Advertisement

This News Fact Checked by 'Newschecker

Advertisement

மகாராஷ்டிரா துலே தொகுதியில் தோல்வி அடைந்த காங்கிரஸ் வேட்பாளர் மறு எண்ணிக்கையில் வெற்றி பெற்றதாக பரவிய தகவலில் உண்மை இல்லை என்பது அம்பலமாகியுள்ளது.

பரப்பப்பட்ட தகவல்: மகாராஷ்டிர தூலே மாலோகன் தொகுதியில் பாஜக 4000 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்தாக அறிவித்த நிலையில் மறு எண்ணிக்கையில் 11 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது

உண்மை: வைரலாகும் தகவல் தவறானதாகும். அங்கு மறுவாக்கு எண்ணிக்கை எதுவும் நடைபெறவில்லை.

மகாராஷ்டிரா துலே தொகுதியில் தோல்வி அடைந்த காங்கிரஸ் வேட்பாளர் மறு எண்ணிக்கையில் வெற்றி பெற்றதாக வீடியோ செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

“மகாராஷ்டிர தூலே மாலோகன் தொகுதியில் பாஜக 4000 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்தாக அறிவித்த நிலையில் மறு எண்ணிக்கையில் 11 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது” என்று இந்த செய்தி பரவுகிறது.

X Link/Archived Link

Screenshot from X @BSGopaal

X Link/Archived Link

உண்மை சரிபார்ப்பு

மகாராஷ்டிரா துலே தொகுதியில் தோல்வி அடைந்த காங்கிரஸ் வேட்பாளர் மறு எண்ணிக்கையில் வெற்றி பெற்றதாகப் பரவும் தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் செய்தி குறித்து அறிய நாம் முதலில் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இடம்பெற்றுள்ள துலே நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் முடிவுகளை ஆராய்ந்தோம்.

அதன் முடிவில், காங்கிரஸ் கட்சி வேட்பாளரான Shobha Dinesh Bachhao துலே தொகுதியில் 5,38,866 ஓட்டுகளுடன் வெற்றி பெற்றுள்ளார் என்பது தெரிய வந்தது. தோல்வியடைந்த பாஜக வேட்பாளர் 5,80,035 பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மற்றும் தோல்வியடைந்த வேட்பாளர்களுக்கு நடுவில் உள்ள ஓட்டு வித்தியாசம் 3831 ஆகும். எனவே, 8000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகப் பரவிய தகவல் இதன்மூலம் தவறாகிறது.

துலேவில் மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்றதா என்பது குறித்து ஆராய்ந்தபோது நமக்கு இச்செய்திகள் கிடைத்தன. அவற்றை இங்கேஇங்கேஇங்கே மற்றும் இங்கே படியுங்கள். அவற்றில் துலேவில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி என்கிற செய்தி மட்டுமே இடம்பெற்றுள்ளது. ஓட்டுகள் மீண்டும் எண்ணப்பட்டதாக எந்த செய்தியும் இல்லை.

தொடர்ந்து, இதுகுறித்த உண்மையறிய நாம் துலே கலெக்டர் மற்றும் மாவட்ட தேர்தல் ஆணையர் பதவி வகிக்கும் அபிநவ் கோயலைத் தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது, அவர் குறிப்பிட்ட செய்தி தவறானது என்று விளக்கமளித்தார். “லோக்சபா தேர்தல் முடிவுகள் ஒளிவுமறைவானது அல்ல. வெற்றி பெற்ற மற்றும் தோல்வியுற்ற வேட்பாளர்களுக்கு முன்பாகவே முடிவுகள் அறிவிக்கப்பட்டன. எந்த காரணத்திற்கும் மறுவாக்கு எண்ணிக்கை என்கிற பேச்சுக்கு இடமில்லை. மேலும், துலே தொகுதியில் இரவு 10 மணியளவிலேயே முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால், மாலை 7 மணிக்கே இந்த செய்தி வைரலாகியுள்ளது” என்று விளக்கமளித்தார். எனவே, துலேவில் மறுவாக்கு எண்ணிக்கை என்று பரவும் தகவல் தவறானதாகும்.

முடிவுரை

மகாராஷ்டிரா துலே தொகுதியில் தோல்வி அடைந்த காங்கிரஸ் வேட்பாளர் மறு எண்ணிக்கையில் வெற்றி பெற்றதாகப் பரவும் தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: பொய்

Note : This story was originally published by 'Newschecker’ and Republished by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Advertisement