For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#DiwaliGift ஆக மத்திய அரசு அனைத்து மக்களுக்கும் ரூ.5000 வழங்கியதா ? - உண்மை சரிபார்ப்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

04:51 PM Nov 12, 2024 IST | Web Editor
 diwaligift ஆக மத்திய அரசு அனைத்து மக்களுக்கும் ரூ 5000 வழங்கியதா     உண்மை சரிபார்ப்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
Advertisement

This news Fact Checked by  ‘Vishvas News’

Advertisement

தீபாவளியையொட்டி, மத்திய அரசு ஐந்தாயிரம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கியதாக சமூக வலைதளங்களில் பதிவு ஒன்று வைரலானது. இது குறித்த உண்மைத் தன்மையைப் பற்றி விரிவாக காணலாம்

தீபாவளி பண்டிகை கடந்த 31ம் தேதி கொண்டாடப்பட்டது. பொதுவாகவே பண்டிகை காலங்களில் பரிசுத் தொகை, கூப்பன்கள், ஸ்கிராட்ச் கார்டுகள், இலவச ரீசார்ஜ் என பல பெயரில் பதிவுகள் வைரலாகும். அதன்படி கடந்த தீபாவளி பண்டிகையை ஒட்டி சமூக வலைதளங்களில் தீபாவளி பரிசுத் தொகையாக மத்திய அரசு சார்பில் ஐந்தாயிரம் ரூபாய் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த பதிவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் படமும் இடம்பெற்றது.

'daily_update_99' என்கிற பெயர் கொண்ட இன்ஸ்டாகிராம் பயனர் அக்டோபர் 29, 2024 அன்று வீடியோவை பகிர்ந்து அதன் கேப்சனில் “தீபாவளிக்கு மோடி அரசின் அதிரடி பரிசு” என பதிவிட்டிருந்தார். மேலும் அந்த தளத்தில் பரிசுத் தொகையை பெற வேண்டுமெனில் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் தொலைபேசி எண்களைப் பகிரவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

மத்திய அரசின் தீபாவளி பரிசு - உண்மையா?

சமூக வலைதளங்களில் வைரலான பரிசுத் தொகை குறித்த பதிவின் உண்மைத் தன்மை குறித்த நியூஸ் விஸ்வாஸ் உண்மை சரிபார்ப்பு செய்தி நிறுவனம் ஆய்வுக்கு உட்படுத்தியது. வைரலான வீடியோவை ஆய்வு செய்தபோது அதில் சந்தேகத்திற்குரிய சில கோரிக்கைகளை காண முடிந்தது. அதன்படி அரசு சாரா இணையதளத்தில் தனிப்பட்ட தகவல்களைப் பகிருமாறு பயனர்களை அது வழிநடத்தியது. இது உண்மையிலேயே அரசின் திட்டமாக இருந்தால், இதே அரசு இணையதளத்திலும் தகவல் சேகரிக்கப்படும்.

இந்த வீடியோ தொடர்பாக Google இல் முக்கிய வார்த்தைகளைப் பயன்படுத்தி தேடுதலுக்கு உட்படுத்தியபோது மத்திய அரசின் தரப்பில் இது தொடர்பான அறிக்கை எதுவும் வெளியாகவில்லை என்பது உறுதியாகியுள்ளது. அக்டோபர் 19, 2022 அன்று இந்தியா டிவியின் யூடியூப் சேனலில் இது தொடர்பான வீடியோ ஒன்று பதிவேற்றப்பட்டுள்ளது. அதே கிளிப் தற்போது பகிரப்பட்ட வீடியோவிலும் இடம்பெற்றுள்ளது. தீபாவளியன்று பிரதமர் மோடி நாடு முழுவதும் உள்ள 75000 இளைஞர்களுக்கு வேலை சான்றிதழை வழங்குவார் என அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவைத்தான் திரித்து வெளியிட்டுள்ளனர்.

இது குறித்த கூடுதல் தகவலுக்கு, இணைய நிபுணர் கிஸ்லே சவுத்ரியை விஸ்வாஸ் நியூஸ் தொடர்பு கொண்டபோது, இந்த வீடியோக்கள் மூலம் தனிப்பட்ட தகவல்கள் சேகரிக்கப்படுவதை அவர் உறுதிப்படுத்தினார். சைபர் கிரிமினல்களால் பகிரப்படும் இது போன்ற கவர்ச்சிகரமான செய்திகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு அவர் அறிவுறுத்தினார்.

இதுபோன்ற தகவல்களை பகிரப்படுவதற்கு ஃபிஷிங் என்கிற வார்த்தையை பயன்படுத்துகின்றனர். அதன்படி இந்த ஃபிஷிங் செய்தியை பகிர்ந்த பயனரின் இன்ஸ்டாகிராம் சுயவிவரத்தை ஆய்வு செய்தபோது இதேபோல பல ஃபிஷிங் செய்திகளை பதிவிட்டிருந்தது காண முடிந்தது. இதில் ஏர்டெல் மற்றும் ஜியோவின் போலியான சலுகைகள், ரூ.3599 மதிப்புள்ள தீபாவளி ரீசார்ஜ் வழங்குவதாகக் கூறி பல பதிவுகள் இடம்பெற்றிருந்தது. அதன்படி இது பயனர்களின் சுயவிவரங்களின் கோரும் விதமாக இதன் தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்தவொரு நிறுவனமும் இதுபோன்ற சலுகைகளை வழங்கவில்லை என்பதால், இந்தச் செய்திகள் தனிப்பட்ட தகவல்களைத் திருடும் நோக்கத்தில் உள்ளன என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

முடிவுரை: 

தீபாவளியன்று அனைத்து மக்களுக்கும் மத்திய அரசு 5000 ரூபாய் பரிசு வழங்கியதாக கூறுவது தவறானது என்றும் இந்தச் செய்திகளின் மூலம் மக்களின் தனிப்பட்ட தகவல்களைச் சேகரித்து மோசடியில் ஈடுபட வாய்ப்புள்ளது எனவும் நிரூபனமாகியுள்ளது. எனவே இதுபோன்ற மோசடிகளுக்கு எதிராக விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதையே இந்த செய்தி நமக்கு உணர்த்துகிறது

Note : This story was originally published by ‘Vishvas News’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Advertisement