Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தமிழிசை சௌந்தரராஜனின் போஸ்டரில் பாஜகவினர் வாயை தைத்து போரட்டம் நடத்தினரா?

04:01 PM Jun 13, 2024 IST | Web Editor
Advertisement

This News Fact Checked by ‘Newschecker'

Advertisement

தமிழிசை சௌந்தரராஜனின் போஸ்டரில் பாஜகவினர் வாயை தைத்து போராட்டம் நடத்தினரா? உண்மை என்னவென்று பார்க்கலாம்.

Claim: தமிழிசை சௌந்தரராஜனின் போஸ்டரில் பாஜகவினர் வாயை தைத்து போரட்டம் நடத்தினர்.

Fact: வைரலாகும் வீடியோவில் போஸ்டரில் இருக்கும் தமிழிசை சௌந்தரராஜனின் வாயை தைப்பவர்கள் பாஜகவினரோ அல்லது அண்ணாமலை ஆதரவாளர்களோ இல்லை. அவர்கள் தீபா பேரவையை சார்ந்தவர்களாவர்.

தமிழ்நாடு பாஜகவில் மாநிலத் தலைவர் அண்ணாமலை எடுத்த சில முடிவுகளை முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்து பேசி இருந்த நிலையில் அண்ணாமலை ஆதரவாளர்கள் தமிழிசைக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழிசை சௌந்தரராஜனின் போஸ்டரில் அவரின் வாயை தைத்து பாஜகவினர் போராட்டம் நடத்தியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

X Link | Archive Link

Archive Link

Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

தமிழிசை சௌந்தரராஜனின் போஸ்டரில் பாஜகவினர் வாயை தைத்து போராட்டம் நடத்தியதாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து,  அவ்வீடியோவை தனித்தனி கீஃபிரேம்களாக பிரித்து அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி ஆய்வு செய்தோம்.

அதில் “தமிழிசை போஸ்டரில் வாயை ஊசி நூலால் தைத்து போராட்டம்” என்று தலைப்பிட்டு 22 டிசம்பர் 2018 அன்று வைரலாகும் வீடியோ குறித்து ஒன்இந்தியா தமிழ் செய்தி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.

அச்செய்தியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராடுபவர்கள் முட்டாள்கள் என்று தமிழிசை கூறியதாகவும் அதை கண்டித்து ஜெ.தீபா பேரவையை சேர்ந்தவர்கள் தமிழிசை போஸ்டரில் வாயை ஊசி நூலால் தைத்து போராட்டம் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து தேடுகையில் ஏசியாநெட் நியூஸ் தமிழ், மற்றும் சமயம் தமிழ் உள்ளிட்ட ஊடகங்களிலும் இச்சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. அச் செய்திகளிலும் தீபா பேரவையை சேர்ந்தவர்களே தமிழிசை போஸ்டரை தைத்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.

Screengrab from Asianet News Tamil

கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கையில் நமக்கு தெளிவாகுவது யாதெனில்,

  1. வைரலாகும் வீடியோவில் போஸ்டரில் இருக்கும் தமிழிசை சௌந்தரராஜனின் வாயை தைப்பவர்கள் பாஜகவினரோ அல்லது அண்ணாமலை ஆதரவாளர்களோ இல்லை. அவர்கள் தீபா பேரவையை சார்ந்தவர்களாவர்.
  2. வைரலாகும் வீடியோவில் காணப்படும் சம்பவம் தற்போது நடந்ததல்ல;  2018 ஆம் ஆண்டு டிசம்பரில் நடந்ததாகும்.  அச்சமயத்தில் அண்ணாமலை பாஜகவிலேயே இல்லை.

Conclusion
தமிழிசை சௌந்தரராஜனின் போஸ்டரில் பாஜகவினர் வாயை தைத்து போராட்டம் நடத்தியதாக பரவும் வீடியோத்தகவல் தவறானதாகும்.  நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக இந்த உண்மையானது தெளிவாகியுள்ளது.

Result: False

Our Sources
Report from One India Tamil, Dated Dember 22, 2018
Report from Samayam Tamil, Dated Dember 21, 2018
Report from Asianet News Tamil, Dated Dember 22, 2018

Note : This story was originally published by ‘Newschecker’ and Republished by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
AnnamalaiAnnamalai supportersBJPJDeepanews7 tamilNews7 Tamil UpdatesPostertamil naduTamilisai Soundrarajanviral video
Advertisement
Next Article