For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி தோற்றதை பட்டாசு வெடித்து கொண்டாடினாரா எஸ்.வி.சேகர்?

11:29 AM Jun 10, 2024 IST | Web Editor
தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி தோற்றதை பட்டாசு வெடித்து கொண்டாடினாரா எஸ் வி சேகர்
Advertisement

This News Fact Checked by ‘Newschecker

Advertisement

தமிழகத்தில் பாஜக கூட்டணி தோற்றதை எஸ்.வி.சேகர் பட்டாசு வெடித்து கொண்டாடியதாக பொய்யாக தகவல் பரப்பப்பட்டது அம்பலமாகியுள்ளது. 

Claim: தமிழகத்தில் பாஜக கூட்டணி தோற்றதை பட்டாசு வெடித்து கொண்டாடினார் எஸ்.வி.சேகர்.

Fact: இத்தகவல் தவறானது என்று எஸ்.வி.சேகர் மறுத்துள்ளார்.  மத்தியில் மோடி மூன்றாவது முறையாக பதவியேற்றதற்காகவே பட்டாசு வெடித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

“தமிழ்நாட்டில் அண்ணாமலை தலைமையிலான பாஜக கூட்டணி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்தததை பட்டாசு வெடித்து கொண்டாடிய நடிகர் எஸ்.வி.சேகர்” என்று குறிப்பிட்டு ஸ்பார்க் மீடியா எனும் இணைய ஊடகம் பதிவு ஒன்றை அதன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.  இப்பதிவுடன் எஸ்.வி.சேகர் சிறுவர் ஒருவருடன் சேர்ந்து பட்டாசு வெடிக்கும் வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டிருந்தது.

இப்பதிவை ஒரு இலட்சத்து தொண்ணூற்று ஓராயிரம் பேருக்கும் மேல் இதுவரை பார்த்துள்ளனர். 5300 பேருக்கு மேல் லைக் செய்துள்ளனர்.

X Link | Archive Link

இதுபோல் பலரும் இதே தகவலுடன் இவ்வீடியோவை பகிர்ந்திருப்பதை காண முடிந்தது.

Archive Link

Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

தமிழகத்தில் பாஜக கூட்டணி தோற்றதை எஸ்.வி.சேகர் பட்டாசு வெடித்து கொண்டாடியதாக தகவல் ஒன்று வைரலானதை தொடர்ந்து, இதுக்குறித்த உண்மையை அறிய எஸ்.வி.சேகரின் சமூக ஊடகப் பக்கங்களை முன்னதாக ஆராய்ந்தோம்.

இதில் எந்த ஒரு தகவலையும் குறிப்பிடாமல் வைரலாகும் வீடியோவை மட்டும் எஸ்.வி.சேகர் அவரது எக்ஸ் பக்கத்தில் நேற்று (07/06/2024) பகிர்ந்திருப்பதை காண முடிந்தது.

இதனைத் தொடர்ந்து எஸ்.வி.சேகரை தொடர்புக்கொண்டு அவ்வீடியோ குறித்து விசாரித்தோம். அவர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கவிருப்பதை கொண்டாடுவதற்காக பட்டாசு வெடித்ததாக தெரிவித்தார்.  சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தகவல் தவறானது என்றும் அவர் தெளிவு செய்தார்.

Conclusion

தமிழகத்தில் பாஜக கூட்டணி தோற்றதை எஸ்.வி.சேகர் பட்டாசு வெடித்து கொண்டாடியதாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும். எஸ்.வி.சேகரே இத்தகவலை மறுத்துள்ளார். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
X Post from S.Ve.Sekhar, Dated June 07, 2024
Phone Conversation with S.Ve.Sekhar

Note : This story was originally published by ‘Newschecker’ and Republished by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Advertisement