This News Fact Checked by ‘PTI’
பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் கலந்து கொள்ள சுவிட்சர்லாந்திலிருந்து இந்தியாவுக்கு நான்கு ஆண்டுகளாக நடந்து வந்ததாக கூறும் ஒரு நபரின் நேர்காணல் காணொலியை பல சமூக ஊடக பயனர்கள் சமீபத்தில் பகிர்ந்து வருகின்றனர். இதுதொடர்பாக பிடிஐ உண்மைச் சரிபார்ப்பு டெஸ்க் நடத்திய விசாரணையில், வைரலாகும் வீடியோ ஹரித்வாரில் நடைபெற்ற 2021 கும்பமேளாவுக்கு முந்தையது என்று கண்டறியப்பட்டது. நான்கு ஆண்டுகள் பழமையான இந்த காணொளி, சமீபத்தியதாகக் கருதப்பட்டு, 2025 மகா கும்பமேளாவுடன் தவறாக இணைக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
வைரலான காணொலி :
ஜனவரி 29 அன்று எக்ஸ் பயனர் ஒரு காணொளியைப் பகிர்ந்து அதில் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் கலந்து கொள்வதற்காக சுவிட்சர்லாந்திலிருந்து இந்தியாவை அடைய நான்கு ஆண்டுகள் நடந்து வந்த மனிதர் என எழுதியிருந்தார்.
சமூக வலைதளங்களில் பகிரப்படும் இந்த வீடியோவினை பிடிஐ Desk, InVid Tool Search மூலம் இயக்கி, சில கீஃப்ரேம்களைக் கண்டறிந்தது. இதன் பின்னர் கூகுள் லென்ஸ் மூலம் கீஃப்ரேம்களில் ஒன்றை இயக்கியபோது, அதே வீடியோவை இதே கூற்றைக் கொண்ட பல பயனர்கள் பகிர்ந்து கொண்டதைக் கண்டறிந்தோம். இதுபோன்ற இரண்டு இடுகைகளை காணலாம்
மேலும் அவற்றின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்புகளை முறையே
இங்கேயும் இங்கேயும் பார்க்கலாம்.
இதனைத் தொடர்ந்து வைரலான காணொலியை கவனமாகக் கேட்டபோது, நேர்காணல் செய்பவர் அந்த நபரிடம் இமாச்சலப் பிரதேசத்திலிருந்து ஹரித்வாரை அடைய எத்தனை நாட்கள் ஆனது என்று கேட்டதை டெஸ்க் கவனித்தது. சரியாக 1:26 நிமிட நேரத்தில் நேர்காணல் செய்பவர் “நீங்கள் எப்போது இமாச்சலப் பிரதேசத்திலிருந்து ஹரித்வாரை அடையப் புறப்பட்டீர்கள்? இதற்கு, அந்த நபர் : “எனக்கு 25 நாட்கள் ஆனது என கூறுகிறார்.
மேலும், காணொளியை முழுமையாக ஆராய்ந்தபோது, காணொளியில் எழுதப்பட்ட ஒரு வாசகம் எங்களுக்கு கிடைத்தது, அது 3:46 நிமிட நேரத்தில் காணமுடியும். அந்த வாசகம்: “...கும்பமேலா 2021...” கீழே அதையே எடுத்துக்காட்டும் ஒரு ஸ்கிரீன்ஷாட் உள்ளது.

இதிலிருந்து ஒரு குறிப்பை எடுத்துக்கொண்டு, டெஸ்க் கூகிளில் முக்கிய சொல்லை ஆய்வு செய்தது. இதன் மூலம் மார்ச் 22, 2021 அன்று பதிவேற்றப்பட்ட ஒரு யூடியூப் வீடியோவைக் கண்டது. அந்த வீடியோவின் தலைப்பு: “ஹரித்வார் கும்பமேளா 2021 சுவிட்சர்லாந்தைச் சார்ந்த பக்தர் 4 ஆண்டுகள் நடந்தே மகா கும்பமேளாவை அடைந்தார்.” எனக் குறிப்பிட்டிருந்தது.

யூடியூப் பதிவில் இடம்பெற்ற டிஸ்கிரிப்ஷனில் "உலகின் மிகப்பெரிய திருவிழாவான மகா கும்பமேளா ஹரித்வாரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள், அதில் நாங்கள் சாதுக்களின் விவாதங்கள் மற்றும் உரையாடல்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். இந்தத் தொடரில், 18 நாடுகளைக் கடந்து 4 ஆண்டுகளில் இந்தியாவை அடைந்த சுவிட்சர்லாந்தின் பெல் பாபாவை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம்" எனக் குறிப்பிட்டிருந்தது.
கீழே இரண்டு படங்கள் இணைத்துக் காட்டப்பட்டுள்ளது, அதில் யூடியூப் காணொளியில் உள்ள நபரும் சமீபத்திய சமூக ஊடக இடுகைகளில் உள்ள நபரும் ஒருவர் என்பதைக் காட்டுகிறது.

மேலும் தேடல் முடிவுகளை மேலும் ஆராய்ந்தபோது, மே 3, 2021 அன்று வெளியிடப்பட்ட Life Beyond Numbers இன் அறிக்கையை டெஸ்க் கண்டது, அதன் தலைப்பில் “இந்த தொழில்நுட்ப வல்லுநர் ஆன்மீகத்தை அடைய சுவிட்சர்லாந்திலிருந்து இந்தியா வரை நடந்தே வந்தார்” எனக் குறிப்பிட்டிருந்தது.
மேலும் அந்த செய்தி அறிக்கையில் "பாபா நடக்கும்போது மட்டுமல்ல, எல்லா நேரங்களிலும் வெறுங்காலுடன் இருக்கிறார். இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ராவிலிருந்து 25 நாட்கள் நடைப்பயணத்திற்குப் பிறகு கும்பமேளாவிற்காக ஹரித்வாரை அடைந்தார்." எனக் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்த செய்தி அறிக்கைக்கான
இணைப்பு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
முடிவு : பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் கலந்து கொள்ள சுவிட்சர்லாந்திலிருந்து இந்தியாவுக்கு நான்கு ஆண்டுகளாக ஒரு நபர் நடந்து வந்ததாக வீடியோ ஒன்று வைரலானது. இதுகுறித்து பிடிஐ உண்மை சரிபார்ப்புக்கு உட்படுத்தியபோது நான்கு வருட பழமையான காணொலி 2025 மகா கும்பமேளாவுடன் தொடர்புபடுத்தி சமீபத்தியது போன்று சமூக ஊடகங்களில் தவறாகப் பகிரப்பட்டதாக பிடிஐ டெஸ்க் முடிவு செய்தது.
Note : This story was originally published by ‘PTI’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.