மகாராஷ்டிரா தேர்தலில் காங்கிரஸுக்கு வாக்களிப்பது வீண் என சஞ்சய் நிரூபம் பேசினாரா? - பரவும் பழைய வீடியோ!
This News Fact Checked by ‘Factly’
மகாராஷ்டிரா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பது வீண் என முன்னாள் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சஞ்சய் நிரூபம் பேசியதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது இதுகுறித்து உண்மைத் தன்மையை விரிவாக காணலாம்.
காங்கிரஸுக்கு வாக்களித்து வாக்குகளை வீணாக்குவதைத் தவிர்த்து, பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவளிக்குமாறு, முன்னாள் காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.
2024 நவம்பர் 20 அன்று முடிவடைந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலை மையமாக வைத்து இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா தேர்தல் நிறைவடைந்து பெரும்பான்மை பலத்துடன் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ குறித்து உண்மைத் தன்மையை ஆராய்வோம்.
உண்மை சரிபார்ப்பு :
சமூக வலைதளங்களில் வைரலாகும் வைரல் வீடியோவிலிருந்து கீஃப்ரேம்களை எடுத்து அதனை கூகுள் ரிவர்ஸ் இமெஜ் தேடலுக்கு உட்படுத்தியபோது அதே வீடியோவைக் ஏப்ரல் 2024 வெளியான செய்தி அறிக்கையை தேடல் அழைத்துச் சென்றது. "காங்கிரஸுக்கு உங்கள் வாக்குகளை வீணாக்காதீர்கள்..." என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ள வீடியோவில் சஞ்சய் நிருபம் சமீபத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் என்று அடையாளம் காட்டுகிறது.
மேலும் இதுகுறித்து விசாரணை செய்தபோது சஞ்சய் நிருபம் காங்கிரஸுடன் தொடர்பில்லை என்பது தெரியவந்தது. 04 ஏப்ரல் 2024 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் கட்சித் தலைமையை தொடர்ந்து விமர்சித்ததற்காக ஒழுங்கு நடவடிக்கையாக அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட மறுநாள் அவர் கட்சியில் இருந்து ராஜினாமா செய்ததாகக் கூறப்பட்டுள்ளது.
ராஜினாமா செய்த பிறகு, சஞ்சய் நிருபம் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் தலைமையின் கீழ் செயல்படும் சிவசேனா கட்சியில் ஏப்ரல் 2024 அன்று இணைந்துள்ளார். எனவே சஞ்சய் நிருபம் பேசியது நடந்து முடிந்த தேர்தலின்போது அல்ல , மக்களவைத் தேர்தலின்போது என்பது நிரூபணமாகிறது.
முடிவு :
2024 மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவளிக்குமாறு முன்னாள் காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுப்பதாக வைரலான வீடியோ சமீபத்தியது அல்ல. அவை 19 ஏப்ரல் 2024 அன்று, 2024 மக்களவைத் தேர்தலின் போது வாக்காளர்களுக்கு நிருபம் வேண்டுகோள் விடுத்த பழைய வீடியோவாகும் எனவே சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ தவறானது.
Note : This story was originally published by ‘Factly’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.