"முத்தமிழ் முருகன் மாநாடு வகுப்புவாதத்தையே வலுப்படுத்தும்" - #Ravikumar எம்.பி பதிவு!
முத்தமிழ் முருகன் மாநாடு வகுப்புவாதத்தையே வலுப்படுத்தும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பழனியில் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு முருக பெருமானின் 3-ம் படை வீடான பழனியில் கடந்த 2 நாட்களாக கோலாகலமாக நடைபெற்றது. இந்த உலக முத்தமிழ் முருகன் மாநாட்டை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 24ம் தேதி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார் மற்றும் முக்கிய பிரமுகர்கள், ஆதீனங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், ஆன்மீக சொற்பொழிவுகள், நாட்டுபுற கலை, இசை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிலையில், முத்தமிழ் முருகன் மாநாடு வகுப்புவாதத்தையே வலுப்படுத்தும் என விசிக பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான ரவிகுமார் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள் : தலித்துகள் முதலமைச்சராக வர முடியாது என பேசியது ஏன்? விசிக தலைவர் #Tirumavalavan பேட்டி!
இது தொடர்பாக அவர் பதிவிட்டிருப்பதாவது :
" முத்தமிழ் முருகன் மாநாடு சமயச் சார்பற்ற தமிழ் அடையாளத்தைப் புகுத்தும் நல்ல நோக்கத்தோடு தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டிருந்தாலும் அது வகுப்புவாதத்தைத்தான் வலுப்படுத்தும். ஏனென்றால் தமிழ்க் கடவுள் எனப்படும் முருகன் இந்து அடையாளத்துக்குள் நீண்ட கலத்துக்கு முன்பே உள்வாங்கப்பட்டுவிட்டார். முருகக் கடவுளுக்கு ஆடு அறுத்துப் படையிலிடப்பட்டது என சங்க இலக்கியங்களில் சொல்லப்படுகிறது. அப்படி பக்தர்கள் இப்போது படையிலிட முடியாது. முருகனும் மற்ற தமிழ்க் கடவுள்களும் இந்து அடையாளத்துக்குள் எப்போதோ உள்வாங்கப்பட்டுவிட்டனர்"
இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.
“முருகன் மாநாடு வகுப்புவாதத்தையே வலுப்படுத்தும் “
முத்தமிழ் முருகன் மாநாடு சமயச் சார்பற்ற தமிழ் அடையாளத்தைப் புகுத்தும் நல்ல நோக்கத்தோடு தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டிருந்தாலும் அது வகுப்புவாதத்தைத்தான் வலுப்படுத்தும். ஏனென்றால் தமிழ்க் கடவுள் எனப்படும் முருகன் இந்து… pic.twitter.com/xVCnkmLOnm
— Dr D.Ravikumar (@WriterRavikumar) August 26, 2024