Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"பணத்தை அச்சடித்து மக்கள் எல்லோருக்கும் வழங்குவேன்" என ராகுல் காந்தி பேசினாரா?

07:35 AM May 23, 2024 IST | Web Editor
Advertisement

This News Fact Checked by ‘Newschecker'

Advertisement

பணத்தை அச்சடித்து மக்கள் அனைவருக்கும் வழங்குவதாக ராகுல் காந்தி பேசியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வீடியோ தவறானது என்று நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.

“நாட்டின் பணவீக்கம், வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் போன்றவையை சரிசெய்ய என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு.. அது என்னனா… பணத்த அச்சடிச்சு எல்லாருக்கும் கொடுக்கிறது – இப்படிக்கு வடமாநில ஸ்டாலின்” என்று ராகுல் காந்தி பேசியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மை குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.

உண்மை சரிபார்ப்பு:

பணத்தை அச்சடித்து மக்கள் எல்லோருக்கும் வழங்குவேன் என்று ராகுல் காந்தி பேசியதாகப் பரவும் வீடியோ தகவல் குறித்த உண்மையை அறிய வைரலாகும் வீடியோவை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கப்பட்டது. அப்போது, குறிப்பிட்ட பகுதி ராகுல் காந்தி உத்தர பிரதேசம் ரேபரேலி தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியபோது எடுக்கப்பட்டது என்பது தெரிய வந்தது.

கடந்த மே 13-ம் தேதியன்று காங்கிரஸின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோவில் அவர், “நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் பொருளாதாரத்தில் பின் தங்கி இருக்கின்ற மகளிருக்கு தேர்தல் அறிக்கையில் அறிவித்தப்படி மாதாமாதம் பணம் வழங்குவோம். அதனை உபயோகித்து நீங்கள் பொருள் வாங்கும்போது நிறுவனங்களின் உற்பத்தி அதிகரிக்க நேரும். இதனால், வேலைவாய்ப்புகள் அதிகரித்து அப்பகுதி மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும்” என்பதாகப் பேசியிருந்தார்.

இதனையே, தவறாக மொழிபெயர்த்து அவர் பணத்தை அச்சடித்து தருவதாகக் கூறியதாகப் பரப்பப்படுகிறது என கண்டறியப்பட்டது.

முடிவு:

பணத்தை அச்சடித்து மக்கள் எல்லோருக்கும் வழங்குவேன் என்று ராகுல் காந்தி பேசியதாகப் பரவும் வீடியோ தகவல் தவறானது என்பது ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

Note : This story was originally published byNewschecker’ and Republished by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
campaignCongressElections2024INCLoksabha Elections 2024News7Tamilnews7TamilUpdatesRaebareliRahul gandhi
Advertisement
Next Article