Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

‘வங்கதேச இந்துக்கள் பற்றி கவலையில்லை’ என எழுதப்பட்ட கைப்பையுடன் பிரியங்கா காந்தி மக்களவைக்கு வந்தாரா?

08:55 PM Dec 31, 2024 IST | Web Editor
Advertisement

This news Fact checked by Vishvas News

Advertisement

வயநாடு எம்.பி.யான பிரியங்கா காந்தி மக்களவைக்கு வரும்போது, ‘வங்கதேச இந்துக்கள் பற்றி கவலையில்லை’ என்ற வாசகம் பொறித்த கைப்பையுடன் வந்ததாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி கடந்த டிசம்பர் 16-ம் தேதி நாடாளுமன்றத்துக்கு வந்தார். இதற்குப் பிறகு, டிசம்பர் 17 அன்று, பிரியங்கா ஒரு புதிய பையுடன் வந்தார். அதில் வங்கதேச சிறுபான்மையினருக்கு ஆதரவாக ஒரு வாசகம் எழுதப்பட்டது. அந்த பையில், 'வங்கதேசத்தின் இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்களுடன் நில் என்ற வாசகத்துடன் தற்போது பிரியங்கா காந்தியின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதில், வங்கதேச இந்துக்களை பற்றி எனக்கு கவலையில்லை என்று அவரது பையில் எழுதப்பட்டிருந்தது.

வைரலான படத்தை விஸ்வாஸ் நியூஸ் ஆய்வு செய்தபோது, அது போலியானது என தெரியவந்தது. பிரியங்கா காந்தியின் அசல் படத்தை எடிட் செய்து வைரலான படம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் பயனர் மனோஜ் ஷர்மா பிரியங்கா காந்தியின் படத்தைப் பகிர்ந்து, “வங்கதேச இந்துக்களைப் பற்றி நான் கவலைப்படவில்லை” என்று பகிர்ந்துள்ளார்.

இந்தப் படத்தில், பிரியங்கா காந்தியின் பையில் ஆங்கிலத்தில் “வங்கதேச இந்துக்களைப் பற்றி எனக்கு அக்கறை இல்லை” என்று எழுதப்பட்டுள்ளது.

பல பயனர்கள் அதை உண்மை என்று நம்பி பகிர்ந்து வருகின்றனர். பதிவின் காப்பக இணைப்பை இங்கே பார்க்கவும்.

உண்மை சரிபார்ப்பு:

காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தியின் வைரலான படத்தின் நம்பகத்தன்மையை சரிபார்க்க விஸ்வாஸ் நியூஸ் கூகுள் லென்ஸ் கருவியைப் பயன்படுத்தியது. தேடலின் போது, ​​Jagran.com இல் அசல் படம் கிடைத்தது. டிசம்பர் 17-ம் தேதி வெளியான இந்த செய்தி, பிரியங்கா காந்தி நாடாளுமன்றத்தில் ஒரு பையை எடுத்துச் செல்வதை விவரித்தது.

அந்தச் செய்தியின்படி, “காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஒரு பையுடன் நாடாளுமன்றத்திற்கு வந்தார். அதன்பிறகு பாஜக அவரை மிகவும் விமர்சித்தது. பாகிஸ்தானில் உள்ள இம்ரான் கானுக்கு நெருக்கமான ஒரு தலைவரும் இதற்கு பிரியங்காவை பாராட்டினார். அதன்பிறகு இந்த பிரச்னையில் காங்கிரஸ் எம்பிக்கள் சூழப்படுவார்கள் என்று தெரிகிறது.” என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த பைக்கு பதிலளித்துள்ளார் பிரியங்கா. பின்னர் பிரியங்கா ஒரு புதிய பையுடன் வந்தார். அதில் வங்கதேச இந்துக்களுக்கு ஆதரவாக வாசகம் எழுதப்பட்டிருந்தது. வங்கதேசத்தில் அட்டூழியங்களை எதிர்கொள்ளும் இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு நீதி கோரி, பிரியங்காவுடன், பல காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முழு செய்தியையும் இங்கே படிக்கவும்.

விசாரணையில், பிரியங்கா காந்தியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ரீல் கிடைத்தது. இது உண்மையான படங்கள் மற்றும் வீடியோக்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது. இந்த ரீல் டிசம்பர் 17 அன்று பதிவேற்றப்பட்டது.

காங்கிரஸ் ஊடக குழு உறுப்பினர் டாக்டர். அஜய் உபாத்யாய் பிரியங்கா காந்தியின் படத்தைப் பகிர்ந்து, அதில் அவர் வங்கதேச சிறுபான்மையினரை ஆதரிப்பது பற்றிப் பேசினார். “வங்கதேசத்தின் இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்களுடன் நில்லுங்கள்” என்று பையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

https://twitter.com/drajayupadhyay/status/1868935949142597870

இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பிரியங்கா காந்தியின் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது தெரியவந்தது. அந்தப் படம் வேண்டுமென்றே ஆங்கிலத்தில் “வங்கதேச இந்துக்களை பற்றி எனக்கு அக்கறை இல்லை” என்று எழுதப்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநெட்டும் வைரலான புகைப்படம் போலியானது என்று கூறியுள்ளார். மேலும், பிரியங்கா காந்தியின் உண்மையான படத்தை பகிர்ந்தார்.

விசாரணையின் முடிவில், போலி படத்தைப் பகிர்ந்த பயனரைத் தேடியபோது, அவர் ஜாம்ஷெட்பூரில் வசிக்கிறார், சுமார் 2000 பேர் அவரைப் பின்தொடர்கின்றனர் என தெரியவந்தது.

முடிவு:

விஸ்வாஸ் நியூஸ் நடத்திய விசாரணையில், காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தியின் வைரலான படம் போலியானது என தெரியவந்துள்ளது. அவரது உண்மையான படம் எடிட் செய்யப்பட்டுள்ளது.

Note : This story was originally published by Vishvas News and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
BangladeshCongressFact CheckhindusINCNews7Tamilparliamentpriyanka gandhiShakti Collective 2024Team ShaktiWayanad
Advertisement
Next Article