மகாகும்பமேளாவின் சிறப்பான ஏற்பாடுகளுக்காக பிரபல பாடகரான தில்ஜித் தோசன்ஜ் உ.பி அரசை பாராட்டினாரா? - Fact Check
This News Fact Checked by ‘PTI’
சமீபத்தில் சமூக ஊடகங்களில் ஒரு காணொலி வைரலானது. அதில் பிரபல இந்திய பாடகரும் நடிகருமான தில்ஜித் தோசன்ஜ், 2025 ஆண்டிற்கான மகா கும்பமேளா நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்ததற்கு யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசை பாராட்டுவதாக அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதுகுறித்து பிடிஐ உண்மை சரிபார்ப்பு மையம் ஆய்வு செய்தபோது அந்த வைரல் கிளிப் தவறான கூற்றுடன் பகிரப்பட்டதைக் கண்டறிந்தது. அசல் காணொலி 2024ஆம் ஆண்டு லக்னோவில் நடந்த தனது இசை நிகழ்ச்சியின் போது செய்யப்பட்ட ஏற்பாடுகளுக்காக தோசன்ஜ் மாநில அதிகாரிகளைப் பாராட்டியபோது எடுக்கப்பட்டது என்பது கண்டறியப்பட்டது.
பிப்ரவரி 11 அன்று ஒரு X பயனர் இந்த வீடியோவை பகிர்ந்து “தில்ஜித்துக்கு என்ன ஆயிற்று? தற்போது அவர் மகா கும்பமேளா ஏற்பாடுகளுக்காக முதல்வர் யோகி ஜியைப் பாராட்டுகிறார்" என்ற தலைப்புடன் என பதிவிட்டுள்ளார். இணைப்பு மற்றும் காப்பக இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
உண்மை சரிபார்ப்பு :
வைரலான வீடியோவை பிடிஐ Desk InVid Tool தேடல் மூலம் இயக்கி பல கீஃப்ரேம்களைக் கண்டறிந்தது. பின்னர் கூகுள் லென்ஸ் மூலம் கீஃப்ரேம்களில் ஒன்றை இயக்கியதன் மூலம், பல பயனர்கள் ஒரே வீடியோவை ஒத்த கூற்றுகளுடன் பகிர்ந்து கொண்டதை டெஸ்க் கண்டறிந்தது. இதுபோன்ற இரண்டு இடுகைகளை [ இங்கே ] மற்றும் [ இங்கே ] காணலாம்.
விசாரணையின் அடுத்த பகுதியில், வைரல் இடுகையில் கூறப்பட்ட கூற்றுக்களை உறுதிப்படுத்த டெஸ்க் கூகிளில் முக்கிய வார்த்தை தேடலை நடத்தியது. இது தில்ஜித் தோசன்ஜின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு அழைத்துச் சென்றது. அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை சுமார் 25.4 மில்லியன் பின் தொடர்பவர்கள் உள்ளனர்.
அவரது கணக்கை ஸ்கேன் செய்தபோது, பிப்ரவரி 9, 2025 அன்று வெளியிடப்பட்ட ஒரு வீடியோவை டெஸ்க் கண்டறிந்தது. அந்த வீடியோவில் வைரல் பதிவில் பகிரப்பட்ட வீடியோ இருந்தது; இருப்பினும், நடந்து வரும் மகா கும்பமேளாவின் போது உ.பி. அரசாங்கத்தின் ஏற்பாடுகளுக்காக தோசன்ஜ் பாராட்டுவதாக அந்த வீடியோவில் கருத்துக்கள் இடம்பெறவில்லை. மாறாக வீடியோவில் உள்ள காட்சிகள் இன்ஸ்டாகிராம் வீடியோவில் உள்ளவற்றுடன் பொருந்துவதைக் காட்டும் ஒரு கூட்டுப் படம் கீழே உள்ளது.
அடுத்து, விசாரணையின் ஒரு பகுதியாக, தில்ஜித் தோசன்ஜ் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட 40 நிமிட வீடியோவை டெஸ்க் கவனமாகப் பார்த்தது. 18:00 மணி நேரத்தில் டோசன்ஜ் தனது சுற்றுப்பயணத்தின் போது தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். 18:09 நேரத்தில் அவர் ஒரு இசை நிகழ்ச்சிக்காக லக்னோவிற்கு வருகை தந்தது குறித்த கருத்துக்கு பதிலளித்தார், இதன் மூலம் அவர் ஏற்கனவே அங்கு நிகழ்ச்சி நடத்தியதை உறுதிப்படுத்தினார். இருப்பினும், 18:28 நேரத்தில் வைரல் கிளிப்பின் பகுதியில் இந்தியா சுற்றுப்பயணத்தின் போது செய்யப்பட்ட ஏற்பாடுகளுக்கு உ.பி. அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்தார்.
அதில் "சிறப்பு ஏற்பாடுகளுக்கு உ.பி. அரசாங்கத்திற்கு நான் சிறப்பு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் " என்று டோசன்ஜ் கூறினார், இது வைரல் வீடியோவில் அவரது கூற்றுடன் ஒத்துப்போகிறது. இருப்பினும், வீடியோவின் முன்பகுதியில் டோசன்ஜ் தனது இசை நிகழ்ச்சியின் போது செய்யப்பட்ட சிறந்த ஏற்பாடுகளுக்காக உ.பி. அரசை குறிப்பிட்டது தெளிவாகத் தெரியவருகிறது. அதேவீடியோவில் லூதியானாவிற்கும் நன்றி என அவர் குறிப்பிட்டார். இருப்பினும் லூதியானாவைப் பற்றிய குறிப்பு வைரல் வீடியோவில் தவிர்க்கப்பட்டது, இதனால் அவர் உ.பி.யைப் பற்றி மட்டுமே பேசுகிறார் என்று தோற்றமளிக்கிறது.
இதனைத் தொடர்ந்து லக்னோவில் நடந்த இந்திய பாடகரின் இசை நிகழ்ச்சியைப் பற்றி மேலும் அறிய, டெஸ்க் மீண்டும் கூகுளில் முக்கிய வார்த்தைகளைத் தேடியபோது நவம்பர் 23, 2024 அன்று டோசன்ஜின் சமூக ஊடகப் பதிவைக் கண்டறிந்தோம்.
அந்தப் பதிவில், பாடகர் தனது தில்-லுமினாட்டி இந்தியா சுற்றுப்பயணத்தின் போது செய்யப்பட்ட ஏற்பாடுகளுக்கு உத்தரப் பிரதேச காவல்துறைக்கு நன்றி தெரிவித்தார். "மிக்க நன்றி. உ.பி.யிலிருந்து சிறந்த ஏற்பாடுகளைப் பெற்றோம்” என டோசன்ஜ் எழுதினார். இதற்கான எக்ஸ் இடுகைக்கான இணைப்பு , கொடுக்கப்பட்டுள்ளது.
முடிவு:
நடைபெற்று வரும் மகா கும்பமேளாவின் உத்தரபிரதேச அரசின் ஏற்பாடுகளைப் பாடகரும் நடிகருமான தில்ஜித் தோசன்ஜ் பாராட்டுவதாகக் கூறும் ஒரு காணொலியை சமூக ஊடகங்களில் வைரலாகிறது. இதுகுறித்து ஆய்வு செய்தபோது 2024ல் லக்னோவில் நடைபெற்ற அவரது இசைநிகழ்ச்சிக்கு நன்றி தெரிவிக்கும் பழைய வீடியோ எடிட் செய்யப்பட்டு கும்பமேளாவுடன் இணைத்து தவறான கூற்றுடன் வைரலாக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
Note : This story was originally published by ‘PTI’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.