For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மக்களவைத் தேர்தல் குறித்து நியூஸ் 2024 செய்தி நிறுவனம் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டதா? - உண்மை என்ன?

10:37 AM May 31, 2024 IST | Web Editor
மக்களவைத் தேர்தல் குறித்து நியூஸ் 2024 செய்தி நிறுவனம் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டதா    உண்மை என்ன
Advertisement

This news fact checked by Newsmeter

Advertisement

மக்களவைத் தேர்தலுக்கான இறுதிக் கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணி எத்தனை இடங்களை பெறும் என நியூஸ் 24 நிறுவனத்தின் கருத்துக் கணிப்புகள் வெளியானதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இதன் உண்மை தன்மை குறித்து நியூஸ் மீட்டர் ஆய்வுக்கு உட்படுத்தியது. இது குறித்து விரிவாக காணலாம்.

நியூஸ் 24 பெயரில் பரவும் கருத்துக் கணிப்புகள்

இந்தியா முழுவதும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் (102) கடந்த மாதம் 19-ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் (88) கடந்த மாதம் 26-ம் தேதியும், கடந்த 7-ம் தேதி 3ம் கட்ட தேர்தலும் (93), கடந்த 13-ம் தேதி 4ம் கட்ட தேர்தலும் (96), கடந்த 20-ம் தேதி 5ம் கட்ட வாக்குப்பதிவும் (49), கடந்த மே 25ம் தேதி 6ம் கட்ட வாக்குப்பதிவு (58) நடைபெற்றது.

இதையடுத்து, 7-ம் கட்ட வாக்குப்பதிவு நாளை (ஜூன் 1 ) நடைபெற உள்ளது.  அதன்படி உத்தர பிரதேசம் மற்றும் பஞ்சாபில் தலா 13 தொகுதிகள்,  மேற்கு வங்கத்தில் 9 தொகுதிகள், பீகாரில் 8 தொகுதிகள்,  ஒடிசாவில் 6 தொகுதிகள்,  இமாச்சலப் பிரதேசத்தில் 4 தொகுதிகள், ஜார்க்கண்டில் 3 தொகுதிகள் மற்றும் யூனியன் பிரதேசமான சண்டிகரில் ஒரு தொகுதியிலும் என மக்களவைத் தேர்தலுக்கான கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.  இந்தத் தேர்தலில் மொத்தம் 904 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

2024 மக்களவைத்  தேர்தலுக்கான கடைசிக் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதி  முடிவடையும் நிலையில், பாஜக தலைமையிலான என்.டி.ஏ மற்றும் காங்கிரஸ் தலைமையிலான இந்திய கூட்டணிக் கட்சிகள் எத்தனை தொகுதிகளை  வெல்லும் என கணித்து நியூஸ் 24 வெளியிட்ட கிராஃபிக்ஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது.

'சத்தா பஜார்'  எனும் நிறுவனம் இந்த கருத்துக்களை எடுத்ததாகவும் இவை நியூஸ் 24 தளத்தின் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியானதாகவும் நியூஸ் கார்டை எக்ஸ் தள பயனர் ஒருவர் பதிவிட்டிருந்தார். இந்த கருத்துக் கணிப்பின்படி என்டிஏ கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணி இடையே கடுமையான போட்டி நிலவுவதாக குறிப்பிட்டது. பலோடி சத்தா பஜாரின் கருத்துக் கணிப்பின் படி  NDA கூட்டணிக்கு 253 இடங்களும், இந்தியா கூட்டணிக்கு 246 இடங்களும் கிடைக்கும் என்று அவை கணித்துள்ளது.

இதேபோல இந்தூர் சரஃபா மற்றும் சூரத் மகோபி ஆகிய கருத்துக் கணிப்புகளும் முறையே 283 மற்றும் 282 இடங்களுடன் NDA க்கு தெளிவான பெரும்பான்மை கிடைக்கும் என தெரிவித்திருந்தது.  இதேபோல சத்தா பஜார்ஸ் கணித்தபடி பாஜக மட்டும் சுமார் 200-260 இடங்களிலும் காங்கிரஸ் 90-128 இடங்களிலும் வெற்றி பெறும் எனவும் இதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதேபோல பெரும்பாலான பிராந்திய சத்தா பஜார் புள்ளிவிவரங்கள் மக்களவையில் தொங்கு அவை ஏற்படும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிப்பதாக சில எக்ஸ் தள பயனர்கள் தெரிவித்திருந்தனர்.

உண்மை சரிபார்ப்பு

நியூஸ் 24 செய்தி நிறுவனம் தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் இந்த  கருத்துக் கணிப்புகள் எதுவும் வெளியிடாததால் அந்தக் கூற்று தவறானது என்று நியூஸ்மீட்டர் கண்டறிந்துள்ளது.  மேலும் இந்த செய்தியை கூர்ந்து கவனித்ததில் இந்த சேனலின் லோகோ நியூஸ் 24 லோகோவைப் போன்று இருந்தாலும் அந்த கார்டில் நியூஸ் 24 என்கிற எழுத்திற்கு பதிலாக நியூஸ் 2024 என இடம்பெற்றுள்ளது.

மேலும் மே 24, 2024 முதல் ஃபலோடி சத்தா பஜாரின் கணிப்புகள் குறித்த ஃபைனாஸ்சியஸ் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் அறிக்கையில் பாஜக 340-350 இடங்களைப் பெறும் என ஆரம்பத்தில் கணிக்கப்பட்டது.  இதோபோல மூன்றாம் கட்ட தேர்தலுக்கு பிறகு 303 இடங்களாகவும் நான்காவது கட்ட தேர்தலுக்கு பிறகு  292-296 இடங்கள் பெறும் எனவும் ஆறாவது கட்ட தேர்தலுக்கு ஒரு நாளுக்கு முன் வெளியான கருத்துக் கணிப்புகளில்  304-306 இடங்களைப் பெறும் எனவும்  பலோடி சத்தா பஜார் கணித்த்ருந்தது.  அதேபோல காங்கிரஸ் 60-62 இடங்களைப் பெறும் அவை தெரிவித்திருந்தது.

அதேபோல சத்தா பஜாரின் கருத்துக் கணிப்புகள் பகிரப்பட்ட X பயனரின் பதிவில் நியூஸ் 24 செய்தி நிறுவனத்தின் நிர்வாக ஆசிரியர் மனக் குப்தா கமெண்ட் செய்துள்ளார். அதில் தங்களது நிறுவனம் இதுபோன்ற கருத்துக் கணிப்புகள் எதையும் வெளியிடவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

https://x.com/manakgupta/status/1795810009076687022

முடிவு:

மக்களவைத் தேர்தலுக்கான இறுதிக் கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணி எத்தனை இடங்களை பெறும் என நியூஸ் 24 நிறுவனத்தின் கருத்துக் கணிப்புகள் வெளியானதாக சமூக வலைதளங்களில் பரவிய செய்தி போலியானது. நியூஸ் 24 செய்தி நிறுவனத்தின் நிர்வாக ஆசிரியர் மனக் குப்தா இதனை மறுத்துள்ளதால் இவை போலி என ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

Note : This story was originally published by Newsmeter and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Advertisement