மல்லிகார்ஜுன கார்கே இப்தார் விருந்தில் கலந்து கொண்டாரா? - வைரலான படம் உண்மையா?
This News Fact Checked by ‘Newsmeter’
ஜனவரி மாதம், பிரயாக்ராஜில் நடந்த மகா கும்பமேளாவின் போது, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கேமராக்களின் முன்னிலையில் பாஜக தலைவர்கள் புனித நீராடுவதை கடுமையாக விமர்சித்தார். இந்த சடங்குகள் வறுமையை ஒழிக்க முடியுமா அல்லது பசித்தவர்களுக்கு உணவளிக்க முடியுமா என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர் "நான் யாருடைய நம்பிக்கையையும் கேள்வி கேட்கவில்லை, ஆனால் குழந்தைகள் பசியால் வாடும் போதும், தொழிலாளர்கள் ஊதியம் பெறாமல் இருக்கும் போதும், கங்கையில் நீராடுவதற்காக ஆயிரக்கணக்கானவற்றை செலவிடுகிறார்கள்" என்று கூறினார்.
கும்பமேளாவில் புனித நீராடுவது குறித்த கார்கேவின் கருத்துக்களுக்கு பதிலளிக்கும் விதமாக, ரம்ஜான் தொடங்கிய பிறகு பல சமூக ஊடக பயனர்கள் அந்தப் படத்தைப் பகிர்ந்து கொண்டனர்.
உண்மைச் சரிபார்ப்பு :
சமூக வலைதளங்களில் வைரலாகும் இந்தக் கூற்று தவறாக வழிநடத்துகிறது என்று நியூஸ்மீட்டர் கண்டறிந்துள்ளது. இந்தப் படம் 2006 ஆம் ஆண்டைச் சார்ந்தது என கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடர்பாக படத்தைத ரிவர்ஸ் இமேஜ் தேடல் மூலம் தேடியபோது, தி இந்து இமேஜஸ் வெளியிட்ட அதே படம் எங்களுக்குக் கிடைத்தது. 2006 ஆம் ஆண்டு கார்கே கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் (கேபிசிசி) தலைவராக இருந்தபோது பெங்களூரில் நடந்த இப்தார் விருந்தின் போது இது பிடிக்கப்பட்டது என்று அது கூறியது.
மேலும் கார்கே சமீபத்தில் கலந்து கொண்ட இப்தார் விருந்துகள் பற்றிய தகவல்களை நாங்கள் தேடினோம், ஆனால் 2025 அல்லது 2024 ஆம் ஆண்டுகளில் இதுபோன்ற நிகழ்வுகளில் அவர் பங்கேற்றது குறித்த விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இருப்பினும், 2023 ஆம் ஆண்டில் பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்த இப்தார் விருந்தில் அவர் கலந்து கொண்டார் என்பதைக் கண்டறிந்தோம் 2019 ஆம் ஆண்டில் மும்பையில் பாபா சித்திக்கின் இப்தார் விருந்திலும், 2015 ஆம் ஆண்டில் சோனியா காந்தி நடத்திய இப்தார் விருந்திலும் அவர் கலந்து கொண்டார்.
எனவே, வைரலான படம் 2006ஐ சார்ந்தது என்று நாங்கள் முடிவு செய்கிறோம்; அது சமீபத்தியது அல்ல. இந்தக் கூற்று தவறாக வழிநடத்துகிறது.
Note : This story was originally published by ‘Newsmeter’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.