காங்கிரஸ் கட்சியின் 6 வாக்குறுதிகள் போலியானவை என கடியம் ஸ்ரீஹரி பேசினாரா? - உண்மை என்ன?
This News Fact Checked by ‘Newsmeter’
ஆறு முக்கிய வாக்குறுதிகளை விமர்சித்து காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த கடியம் ஸ்ரீஹரி பேசியதாக வீடியோ வைரலானது. இது தொடர்பான உண்மைத் தன்மையை விரிவாக காணலாம்.
தேர்தலின்போது அளித்த 6 வாக்குறுதிகளை நிறைவேற்ற பட்ஜெட் இல்லை என்று தெலங்கானா சட்டமன்ற உறுப்பினர் கடியம் ஸ்ரீஹரி கூறியதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது. காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டே அக்கட்சி கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை எம்எல்ஏ நிறைவேற்ற முடியாது கூறி வருவதாகவும் இந்த வீடியோவில் சொல்லப்பட்டுள்ளது.
இந்த வீடியோவில், காங்கிரஸ் கட்சி தேர்தலில் அளித்த வாக்குறுதிகளுக்கு ஆண்டுக்கு ரூ.1.36 லட்சம் கோடி தேவை என்றும் தொகுதியில் 3500 வீடுகள் வழங்க செயல்படுத்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி போதாது என எம்எல்ஏ ஸ்ரீஹரி தெரிவித்துள்ளார். மகாலட்சுமி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் மற்றும் ஓய்வூதியத்தை உயர்த்துவது உள்ளிட்ட ஆறு வாக்குறுதிகளை மிக சத்தமாக மக்களிடம் கொண்டு சென்றீர்கள். ஆறு வாக்குறுதிகள்தான் உங்களை வெற்றிக்கு வழிவகுத்தன.மக்கள் நம்பி உங்களுக்கு வாக்களித்தார்கள், ஆட்சிக்கு வந்த பிறகு... பிடிவாதமாக செய்யமுடியாது என கை காட்டப் பார்க்கிறார்கள். என்று அந்த வீடியோவில் எம்.எல்.ஏ. பேசுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
இந்த வீடியோவைப் பகிர்ந்தவர் "காங்கிரஸ் கட்சியில் இருந்துகொண்டே ஆறு வாக்குறுதிகளை கடியம் ஸ்ரீஹரி விமர்சனம் " என்று தலைப்பில் என எழுதியுள்ளார். இதே போன்ற உரிமைகோரல்களைக் கொண்ட ஒரு இடுகையை இங்கே காணலாம்.
உண்மை சரிபார்ப்பு :
நியூஸ்மீட்டர் இந்தக் கூற்றுகள் தவறானவை என்று கண்டறிந்துள்ளது. இந்த காணொலியில் எம்எல்ஏ கடியம் ஸ்ரீஹரி கூறிய கருத்துக்கள் பாரத ராஷ்டிர சமிதி கட்சியில் இருந்தபோது வெளியிடப்பட்டவை. 15 பிப்ரவரி 2024 அன்று டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட 6 முக்கிய வாக்குறுதிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி போதுமானதாக இலலை: ஸ்ரீஹரி" என்ற கட்டுரையை முக்கிய வார்த்தை தேடலைப் பயன்படுத்தி நாங்கள் கண்டறிந்தோம்.
இக்கட்டுரையில் சட்டசபைத தேர்தலின்போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற காங்கிரஸ் அரசுக்கு 1.36 லட்சம் கோடி ரூபாய் தேவை என்றும், ஆனால் பட்ஜெட்டில் 53 ஆயிரம் கோடி மட்டுமே அரசு ஒதுக்கியுள்ளது என்றும் பிஆர்எஸ் எம்எல்ஏவும், முன்னாள் துணை முதல்வருமான கடையம் ஸ்ரீஹரி தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 14, 2024 அன்று வெளியிடப்பட்ட 'டிஎஸ் சட்டமன்றம்: விவசாயி கடன் தள்ளுபடி எப்போது நிறைவேற்றப்படும்? கடியம் ஸ்ரீஹரி" என்ற கட்டுரையில் எம்எல்ஏ ஸ்ரீஹரி கூறியுள்ள கருத்துக்களைக் குறிப்பிட்டு, சட்டமன்றத்தில் நடந்த விவாதத்தின் போது அவர் பேசியதாக எழுதப்பட்டுள்ளது.
பிப்ரவரி 14 2024 அன்று நடைபெற்ற தெலங்கானா சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தின் விடியோ T News தெலுங்கு YouTube சேனலில் முக்கிய தேடல் மூலம் சரிபார்க்கப்பட்டது. இந்த கூட்டத்தில் எம்எல்ஏ சுமார் ஒரு மணி நேரம் பேசியுள்ளார். அதே வீடியோவில் வைரல் வீடியோவில் சரியாக 37:23 நிமிடங்களில் தோன்றும் எம்எல்ஏவின் கருத்துகளின் கிளிப்பை நீங்கள் காணலாம்.
2024 பிப்ரவரியில் தெலங்கானா சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தின் போது எம்எல்ஏ கடியம் ஸ்ரீஹரி கூறிய கருத்து வைரலான வீடியோவில் தெரியவந்துள்ளது. ஆனால், இந்த கருத்தை தெரிவிக்கும் போது எம்எல்ஏ காங்கிரஸ் கட்சியில் இல்லை. மார்ச் 2024 இல் மக்களவைத் தேர்தலுக்கு முன்பு கடியம் ஸ்ரீஹரி மற்றும் அவரது மகள் காவ்யா ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
கடியம் ஸ்ரீஹரியின் அரசியல் பயணம்:
கடியம் ஸ்ரீஹரி பிப்ரவரி 1987 இல் தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்து வாரங்கல் மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிட்டு அரசியலில் நுழைந்தார். 1994ல் ஸ்டேஷன் கான்பூர் தொகுதி தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். கடியம் தெலுங்கு தேசம் சுட்சி ஆட்சியில் இருந்தபோது பல்வேறு துறைகளில் அமைச்சராக பதவி வகித்தார்.
2013 மே மாதம் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து ராஜினாமா செய்து டிஆர்எஸ் (இப்போது பிஆர்எஸ்) கட்சியில் சேர்ந்தார் . 2023 தெலங்கானா சட்டப் பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்து, ஸ்டேஷன் கான்பூர் சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏ.வானார். மார்ச் 31, 2024 அன்று முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் ஏஐசிசி பொறுப்பாளர் தீபா தாஸ்முன்ஷி முன்னிலையில் கடியம் தனது மகள் காவ்யாவுடன் பிஆர்எஸ் கட்சியில் இருந்து காங்கிரசில் இணைந்தார்.
முடிவு :
ஆறு முக்கிய வாக்குறுதிகளை விமர்சித்து காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த கடியம் ஸ்ரீஹரி பேசியதாக வீடியோ வைரலானது. இதுதொடர்பாக உண்மைத் தன்மையை ஆய்வுக்கு உட்படுத்தியதில் எம்எல்ஏ கடியம் ஸ்ரீஹரி பிஆர்எஸ் கட்சியில் உறுப்பினராக இருந்தபோது தெரிவித்த கருத்துக்கள் தற்போது பேசியதாக வைரலாகி வருவது கண்டறியப்பட்டுள்ளது. அப்போது எம்எல்ஏ ஸ்ரீஹரி காங்கிரஸ் கட்சியில் சேரவில்லை. எனவே வைரலாகும் கூற்றுகள் தவறானவை என்று நியூஸ்மீட்டர் முடிவு செய்துள்ளது.
Note : This story was originally published by ‘Newsmeter’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.