ஜார்க்கண்ட் பாஜக தலைவர் பாபுலால் மராண்டி பிரதமர் மோடியை விமர்சித்தாரா? உண்மை என்ன?
This news Fact Checked by ‘Newsmeter’
ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் முடிந்த நிலையில் பிரதமர் மோடியின் நிறைவேற்றாத வாக்குறுதிகள் மற்றும் பிரித்தாளும் அரசியல் குறித்து விமர்சித்ததாக குற்றம் சாட்டி அம்மாநிலத்தின் பாஜக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான பாபுலால் மராண்டியின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2024 சட்டமன்றத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவில் 64.86% வாக்குகள் பதிவாகியுள்ளன. நேற்று (நவ. 20) இரண்டாவது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு முடிவுற்றது. இதில் 68.45% வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில், ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) மற்றும் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) இடையே போட்டி தீவிரமடைந்துள்ளது. இரு கட்சிகளும் வேலை வாய்ப்பு, வள மேலாண்மை, மற்றும் பிராந்திய அடையாளம் போன்ற முக்கிய பிரச்னைகளில் கவனம் செலுத்தி வாக்காளர்களை கவர்ந்திழுக்கின்றன.
இந்நிலையில், ஜார்க்கண்ட் பாஜக தலைவர் பாபுலால் மராண்டி, பிரதமர் நரேந்திர மோடி பிரித்தாளும் அரசியலை ஊக்குவிப்பதாக விமர்சிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இந்த வீடியோவில், மராண்டி, “2014 இல் மோடி ஜி அளித்த வாக்குறுதிகள் பெரும்பாலும் நிறைவேற்றப்படவில்லை. மாறாக, சமூகத்தை துண்டாடும் அரசியல், பிரிவினைவாத அரசியல் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. மாடுகள், கோயில்-மசூதி விவாதங்கள், மத மாற்றம், லவ் ஜிகாத் போன்ற பிரச்னைகள், இந்து - முஸ்லிம்களுக்கு இடையே தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்த பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறான பிளவுகளை வளர்ப்பதற்காக மக்கள் இந்த அரசாங்கத்தை தெரிவு செய்யவில்லை. துரதிர்ஷ்டவசமாக, ஏழைகள் மீது கொடூரமான விளையாடப்படுகின்றன. அப்படிப்பட்ட அரசை ஆதரிப்பது யார்? அப்படிச் செய்பவர் சமுதாயத்திற்கான கடமையை செய்யத் தவறியவர். மோடி ஜி பிரதமராகத் தொடர்ந்தால், அடுத்த ஐந்தாண்டுகளில் இந்தியாவின் நிலைமை மோசமடையக்கூடும், இது வகுப்புவாத கலவரங்கள் அதிகரித்து தேசத்தின் முன்னேற்றத்தை நிறுத்தும். இந்தியா இன்னொரு பாகிஸ்தானாக மாறுவதை யார் பார்க்க விரும்புவார்கள்?" என கூறுவது போல் அமைந்துள்ளது.
ட்விட்டர் (எக்ஸ்) பயனர் ஒருவர் இந்த வீடியோவைப் பகிர்ந்து, “வியத்தகு வெளிப்பாடு மற்றும் ஒரு வெடிக்கும் உண்மை: பாஜகவின் ஜார்கண்ட் தலைவர் உண்மையைப் பேசுகிறார். மோடி இன்னும் ஐந்தாண்டுகள் பிரதமராக இருந்தால், இந்தியா பாகிஸ்தானாக மாறிவிடும் என்றும், கலவரங்களும் குழப்பங்களும் அன்றாட விவகாரமாக மாறிவிடும் என்றும் அவர் கூறுகிறார்.
இதைப் பற்றி மோடி என்ன நினைக்கிறார்? இந்தத் தலைவரையும் காலிஸ்தானி என்று முத்திரை குத்திவிடுவாரா அல்லது பாகிஸ்தானுக்குச் செல்லச் சொல்வாரா? அவருடைய தைரியத்தை நான் பாராட்டுகிறேன். கடந்த பதினோரு ஆண்டுகளில், மோடி ஜியின் யதார்த்தத்தை தேசத்திற்கு கேமரா முன் வெளிப்படையாகக் காட்ட எந்த பாஜக தலைவரும் துணியவில்லை. ஆனால் அவர் சொன்னது சரிதான், அதற்கான செயல்முறை ஏற்கனவே மோடிஜியால் தொடங்கப்பட்டு விட்டது. (காப்பகம்)” என பகிர்ந்துள்ளார்.
உண்மை சரிபார்ப்பு:
வீடியோவின் கீஃப்ரேம்கள் தலைகீழ் படத் தேடுதல் செய்யப்பட்டது. அப்போது டிசம்பர் 14, 2018 அன்று பேஸ்புக் பயனர் அசோக் கோப் பதிவேற்றிய பதிப்பிற்கு அழைத்துச் சென்றது. அந்த இடுகையில் பாபுலால் மராண்டியை மேற்கோள் காட்டி, “பாஜகவுக்கு வாக்களிப்பவர்கள் சமூகத்தில் மிக மோசமான மக்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ரஃபேல் ஒப்பந்தம் குறித்து ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான பாபுலால் மராண்டியிடம் கேட்டபோது, அது குறித்து கருத்து தெரிவிப்பது சரியல்ல என்று கூறி, அதே தேதியில் உள்ளூர் ஊடகமான தாசா டிவியின் ஜார்க்கஹாண்ட் பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோவும் கண்டறியப்பட்டது. இருப்பினும், தற்போதைய பாஜக அரசை குறை சொல்ல அவர் தயங்கவில்லை.
தஸ்ஸா டிவியின் இந்த செய்தி குறித்து அப்போதைய ஜார்கண்ட் பாஜக தலைவரான கமலேஷ் மிஸ்ராவிடம் கேட்கப்பட்டது. அவர் இந்த வீடியோ டிசம்பர் 2018 க்கு முந்தையது என்று நியூஸ்மீட்டருக்கு உறுதிப்படுத்தினார். மேலும் கமலேஷ் மிஸ்ரா, “பாபுலால் மராண்டி அப்போது ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சாவை வழிநடத்தினார். மேலும் பிரதமர் மோடியையும் அவரது கொள்கைகளையும் அடிக்கடி விமர்சித்தார். அந்தக் காலக்கட்டத்தில் மத்திய அரசை அவர் தொடர்ந்து விமர்சித்து வந்ததன் ஒரு பகுதியாக மராண்டியின் கருத்துக்கள் அமைந்திருந்தன” என தெரிவித்தார்.
அதேபோல், செப்டம்பர் 2, 2023 அன்று வெளியிடப்பட்ட தி நியூஸ் கஜானாவின் அறிக்கையும் சரிபார்க்கப்பட்டது. இது பாஜக மீதான மராண்டியின் முந்தைய விமர்சனங்களை எடுத்துக்காட்டுகிறது. பாஜகவுக்கு வாக்களிக்கும் எவரும் மதிப்பற்றவர்களாக கருதப்படுவார்கள் என்றும், மோடி அரசும் பாஜகவும் இந்தியாவை பாகிஸ்தானாக மாற்றுவதாகவும் மராண்டி ஒருமுறை கூறியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், அறிக்கையின்படி, பாஜகவில் இணைந்த பிறகு, மராண்டி தனது கவனத்தை மாற்றி, முதலமைச்சர் ஹேமந்த் சோரன் மற்றும் அவரது அரசாங்கம் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இந்தியா டுடே அறிக்கையின்படி , பாபுலால் மராண்டி தனது தாய்க் கட்சியான பாஜகவிலிருந்து 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சேர்ந்தார். பிப்ரவரி 17, 2020 அன்று, ராஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மராண்டி தனது ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சாவை (ஜேவிஎம்) பாஜகவுடன் இணைத்தார்.
முடிவு:
எனவே, மராண்டியின் காணொளி 2018ஆம் ஆண்டைச் சேர்ந்தது என்றும், பிரதமர் மோடியின் சமீபத்திய விமர்சனத்தைக் காட்டவில்லை என்றும் கூற்று தவறானது என்றும் முடிவு செய்யப்பட்டது.
Note : This story was originally published by ‘Newsmeter’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.