For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இளம் மல்யுத்த வீரரை பிரிஜ் பூஷன் சிங் அறைந்தாரா ? - உண்மை என்ன ?

01:17 PM Nov 28, 2024 IST | Web Editor
இளம் மல்யுத்த வீரரை பிரிஜ் பூஷன் சிங் அறைந்தாரா     உண்மை என்ன
Advertisement

This news Fact Checked by PTI

Advertisement

இளம் மல்யுத்த வீரரை இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் அறைந்ததாக சமூக வலைதளங்கள் வீடியோ வைரலானது. இதுகுறித்த உண்மைத் தன்மையை விரிவாக காணலாம்.

பாஜக தலைவர்களில் ஒருவரும், இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங், மல்யுத்த வீரரை மேடையில் அறைந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பகிர்ந்து வரும் பயனர்கள் இது சமீபத்தியது என்றும் ராஞ்சியில் நடைபெற்ற ஒரு விழாவில் இளம் மல்யுத்த வீரரை அறைந்ததாகவும் பதிவிட்டுள்ளனர். ஆக்ரா லைவ் நியூஸ் எனும் பேஸ்புக் பக்கத்தில் நவம்பர் 22 அன்று ஒரு வீடியோவைப் பகிரப்பட்டு " பிரிஜ்பூஷன் சரண் சிங் எம்பி ராஞ்சியில் இளம் மல்யுத்த வீரரை அறைந்தார்” என குறிப்பிடப்பட்டிருந்தது.

https://www.facebook.com/watch/?v=8065209243578775&ref=sharing

உண்மை சரிபார்ப்பு :

சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோவை உன்னிப்பாக கவனித்ததில், வீடியோ உள்ள படத்தில் டிசம்பர், 2021 என்று எழுதப்பட்டிருப்பதைக் காணமுடியும். இதனைத் தொடர்ந்து இந்த் பதிவு தொடர்பான முக்கிய வார்த்தைகளை கூகுளில் தேடியபோது அவை இதற்கு முன்னர் வெளியான பல ஊடக அறிக்கைகளை காட்டியது. டிசம்பர் 18, 2021 அன்று பிபிசி இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, அப்போதைய இந்திய மல்யுத்த சங்கத்தின் தலைவரும், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங், 15 வயதுக்குட்பட்ட தேசிய மல்யுத்தம் தொடர்பான நிகழ்ச்சி மேடையில் மல்யுத்த வீரரைத் தாக்கினார் என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் டிசம்பர் 15 அன்று ராஞ்சியில் உள்ள கெல்கானில் நடந்த சாம்பியன்ஷிப் போட்டியின்போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல டைனிக் பாஸ்கர் இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, 2021 டிசம்பரில் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 15 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்திய மல்யுத்த சங்கத்தின் அப்போதைய தலைவர் பிரிஜ்பூஷன் சரண் சிங் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். உ.பி.யைச் சேர்ந்த ஒரு இளம் மல்யுத்த வீரரும் மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க வந்திருந்தார், ஆனால் வயது முதிர்வு காரணமாக அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு, ஏமாற்றமடைந்த மல்யுத்த வீரர் மேடையில் ஏறி, மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தன்னை சேர்க்குமாறு பிரிஜ் பூஷன் சரண் சிங்கிடம் கோரிக்கை வைக்கத் தொடங்கினார். ஆனால் பிரிஜ்பூஷன் சிங் ஒப்புக் கொள்ளவில்லை, இதனால் மல்யுத்த வீரர் அங்கு சலசலப்பை ஏற்படுத்தத் தொடங்கினார். இதனால் ஆத்திரமடைந்த பிரிஜ் பூஷன் சரண் சிங் அவரை பலமுறை அறைந்தார். இதன் பின்னர் மல்யுத்த வீரரை சமாதானப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது, ஆனால் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. இந்த காரணத்திற்காக அவர் அறைந்தார் என செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முடிவு:

இளம் மல்யுத்த வீரரை பிரிஜ்பூஷன் சிங் அறைந்ததாக வைரலான வீடியோ சமீபத்தியது இல்லை எனவும் அவை 2021 டிசம்பர் மாதத்திலிருந்து வெளியானவை என்பதும் உண்மை சரிபார்ப்பில் உறுதியாகிறது. பயனர்கள் சமூக ஊடகங்களில் பழைய வீடியோக்களை பகிர்ந்து குழப்பத்தை பரப்புகின்றனர்.

Note : This story was originally published by PTI and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Advertisement