சுயேட்சை எம்.எல்.ஏவின் வீட்டை அடித்து நொறுக்கிய பின்னர் பாஜகவைச் சார்ந்த குன்வர் சிங் துப்பாக்கியுடன் நடனமாடினாரா? - உண்மை என்ன?
This News Fact Checked by ‘FACTLY’
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் கான்பூர் சுயேட்சை எம்எல்ஏ உமேஷ் குமாரின் அலுவலகத்தை முன்னாள் எம்எல்ஏ குன்வர் பிரணவ் சிங் சாம்பியன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இந்த சம்பவத்தை தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் சில வீடியோக்கள் ( இங்கே , இங்கே மற்றும் இங்கே ) வைரலாகி வருகிறது.
உண்மை சரிபார்ப்பு :
சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோவில் இருந்து கீஃப்ரேம்களைப் பயன்படுத்தி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலுக்கு உட்படுத்தியபோது அவை 17 ஜூலை 2019 தேதியிட்ட X இல் பதிவிடப்பட்ட NDTV இடுகைக்கு வழிவகுத்தது , அதில் வைரல் வீடியோவின் ஸ்கிரீன் ஷாட் இடம்பெற்றுள்ளது. அந்த செய்தியில் வைரலான வீடியோவில் துப்பாக்கியுடன் நடனமாடிய பாஜக எம்.எல்.ஏ பிரணவ் சிங் 'சாம்பியன்', கட்சியில் இருந்து 6 ஆண்டுகள் நீக்கப்பட்டுள்ளார் " என்று தலைப்புடன் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வைரலான வீடியோ 2019 ஆம் ஆண்டுக்கு முந்தையது என்பது தெளிவாகிறது.
மேலும் இது தொடர்பாக ஆய்வுக்கு உட்படுத்தியபோது 10 ஜூலை 2019 இன் NDTV வீடியோ அறிக்கைக்கு நம்மை அழைத்துச் சென்றது , இது வைரலான வீடியோவை இந்தி தலைப்புடன் காட்டுகிறது, " ஆயுதங்களை வைத்து நடனமாடியதற்காக பாஜக எம்எல்ஏ பிரணவ் சிங் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்” என குறிப்பிடப்பட்டிருந்தது.
பல செய்தி அறிக்கைகளின் அடிப்படையில் ( இங்கே , இங்கே மற்றும் இங்கே ) மேலும் ஆய்வு செய்தபோது 10 ஜூலை 2019 அன்று, பாஜக எம்எல்ஏ பிரணவ் சிங் சாம்பியன் துப்பாக்கிகளை காட்டி நடனமாடியது மக்களை துஷ்பிரயோகம் செய்கிறார் என்கிற குற்றச்சாட்டுகளை முன்வைத்து பரவலான பேசுபொருளை ஏற்படுத்தியது” என அந்த செய்தி அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன. இது தொடர்பாக அவர் மீது டேராடூனில் உள்ள நேரு காலனி காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. அப்போதைய பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா உத்தரகாண்ட் கட்சித் தலைவர் அஜய் பட்டிடம் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார், இதனால் சாம்பியனை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்தது பாஜக. அவரது சர்ச்சைக்குரிய நடத்தைக்காக குன்வர் பிரணவ் சிங் சாம்பியன் பின்னர் மன்னிப்பு கேட்டார். தான் மதுபோதையில் இருந்ததால் அவ்வாறு நடந்து கொண்டதாக அவர் விளக்கம் அளித்தார்.
இதற்கிடையில், 26 ஜனவரி 2025 அன்று, ஹரித்வாரில் உள்ள கான்பூரில், முன்னாள் எம்எல்ஏ குன்வர் பிரணவ் சிங் சாம்பியன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சுயேட்சை எம்எல்ஏ உமேஷ் குமாரின் அலுவலகத்தை சேதப்படுத்தினர் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். சுயேட்சை எம்.எல்.ஏவான உமேஷ் ஒரு நாள் முன்னதாக பிரணவ் வீட்டிற்குள் நுழைந்து அவரது குடும்பத்தினரை அச்சுறுத்தியதற்கு பழிவாங்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பிரணவ் தரப்பு குற்றம்சாட்டியுள்ளது.
முடிவு :
2019 ஆம் ஆண்டு பாஜக முன்னாள் எம்எல்ஏ பிரணவ் சிங் சாம்பியன் துப்பாக்கியுடன் நடனமாடும் வீடியோ சமீபத்திய சம்பவத்தை சித்தரிப்பதாக பகிரப்பட்டுள்ளது.
Note : This story was originally published by ‘FACTLY’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.