நாட்டின் தற்போதைய அரசியல் குறித்து ‘அமிதாப் பச்சன்’ கருத்து தெரிவித்தாரா?
This News Fact Checked by ‘Factly’
நாட்டின் தற்போதைய அரசியல் குறித்து பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் கருத்து தெரிவித்ததாக இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் வெளியிட்டதாகக் கூறப்படும் வீடியோவைக் கொண்ட ஒரு பதிவு (இங்கே, இங்கே, மற்றும் இங்கே) சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இறுதியாக அமிதாப் பச்சன் தனது மௌனத்தை கலைத்து மக்களின் கண்களை திறக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் என்று அந்த பதிவில் கூறப்படுகிறது. அந்த வீடியோவில், அமிதாப் பச்சனைப் போன்ற ஒரு நபர் அரசியல் கருத்துக்களை வெளியிடுவதை கேட்கமுடிகிறது.
வைரலான கூற்றின் உண்மைத்தன்மையை சரிபார்க்க, அமிதாப் பச்சன் இந்த வீடியோவை வெளியிட்டாரா என்பதைச் சரிபார்க்க இணையத்தில் முக்கிய வார்த்தைகள் தேடப்பட்டன. அவருடைய அனைத்து அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்குகளும் (இங்கே, இங்கே, மற்றும் இங்கே) சரிபார்த்த பிறகு அவற்றில் வைரலான வீடியோ இல்லை என உறுதி செய்யப்பட்டது. மேலும், அமிதாப் பச்சன் அப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டதாக எந்த செய்தியும் இல்லை.
வைரலான காட்சிகளைப் பார்க்கும்போது, 'அப்பு பட்டேல் பிஜேபி' என்று வாட்டர்மார்க் ஒன்று காணப்பட்டது. முக்கிய வார்த்தை தேடலின் மூலம், அப்பு படேலின் Facebook சுயவிவரம் கண்டறியப்பட்டது. அதில் வைரல் வீடியோவில் காணப்பட்ட அதே வாட்டர்மார்க் இடம்பெறும் வீடியோக்கள் (இங்கே, இங்கே, மற்றும் இங்கே) இருந்தன. இருப்பினும், அவரது சுயவிவரத்தில் வைரலான வீடியோ காணவில்லை.
இந்த பொதுவான வாட்டர்மார்க், பல்வேறு திரைப்படங்கள் மற்றும் சம்பவங்களின் வீடியோவில் குரல் ஒன்றாக எடிட் செய்யப்பட்ட விதம் வைரலான வீடியோ இவரால் எடிட் செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது. மேலும், வீடியோவில் உள்ள குரல் குறைவாக உள்ளது. மேலும், அமிதாப் பச்சனின் குரலுக்கு 100% ஒத்ததாக இல்லை. எனவே குரல் AI-ஆல் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்துடன், வீடியோவில் உள்ள குரலில் எடிட் செய்யப்பட்ட ஆதாரங்களை கண்டறிந்த (காப்பக இணைப்பு) AI உள்ளடக்கத்தைக் கண்டறியும் கருவியான TrueMedia மூலம் வீடியோ இயக்கப்பட்டது.
வைரல் வீடியோவிலிருந்து ஹைவ் மாடரேஷன் மூலம் ஆடியோ இயக்கப்பட்டது. இது AI பயன்பாட்டை கண்டறியும் கருவி. ஹைவ் இன் பகுப்பாய்வு அறிக்கை (காப்பக இணைப்பு) AI ஆல் ஆடியோ உருவாக்கப்படுவதற்கான 99.9% வாய்ப்பு உள்ளது என்பதைக் காட்டுகிறது.
முடிவு:
நாட்டின் தற்போதைய அரசியல் நிலை குறித்து அமிதாப் பச்சன் தனது கருத்தை வெளிப்படுத்தும் வீடியோவாக AI ஆல் உருவாக்கிய குரல் அடங்கிய எடிட் செய்யப்பட்ட வீடியோ தவறாக பகிரப்பட்டுகிறது.
Note : This story was originally published by ‘Factly’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.