Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"இந்தியாவின் அடுத்த பிரதமர் ராகுல் காந்தி” என நடிகர் ஷாருக்கான் கூறினாரா? உண்மை என்ன?

03:26 PM May 30, 2024 IST | Web Editor
Advertisement

This news fact checked by PTI News

Advertisement

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் “காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்தியாவின் அடுத்த பிரதமர்” என தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்ததாக வைரலாகிவரும் ஸ்கிரீன் ஷாட் போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.

நடிகர் ஷாருக்கானின் ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பகிரப்பட்டதாக ஒரு பதிவின் ஸ்கிரீன் ஷாட் பல சமூக ஊடக பயனர்களால் பகிரப்பட்டு வருகிறது. "காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்தியாவின் அடுத்த பிரதமராக இருப்பார்" என்று ஷாருக்கான் பதிவிட்டுள்ளதாக அந்த ஸ்கிரீன் ஷாட் வைரலாகி வருகிறது.

இதுகுறித்த Press Trust of India உண்மை சரிபார்ப்பில், சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஸ்கிரீன் ஷாட் போலியானது என்றும், ஷாருக்கான் காங்கிரஸ் தலைவர் குறித்து சமீபத்தில் எதுவும் பகிரவில்லை என்றும் கண்டறியப்பட்டது.

உண்மை சரிபார்ப்பு:

கடந்த மே 25-ம் தேதியன்று ஒரு இன்ஸ்டாகிராம் பயனர் ஷாருக்கான் பதிவிட்டதாக வைரலாகிவரும் ஸ்கிரீன் ஷாட்டை பகிர்ந்துள்ளார். இந்த பதிவு குறித்த விசாரணையை தொடங்கி, சமூக ஊடக தளங்கள் ஸ்கேன் செய்யப்பட்டது. இதன்மூலம் பல பயனர்கள் இதே ஸ்கிரீன்ஷாட்டைப் பகிர்ந்துள்ளது கண்டறியப்பட்டது. மேலும் இதேபோல் ஸ்கிரீன்ஷாட் யூடியூப்பிலும் பரவலாகப் பகிரப்பட்டது.

பின்னர் கூகுளில் முக்கிய வார்த்தைகள் தேடல் நடத்தப்பட்டது. ஆனால் அத்தகைய சமூக ஊடக செய்திகள் குறித்து எந்த அறிக்கையையும் கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து, ஷாருக்கானின் அதிகாரப்பூர்வ X பக்கம் சரிபார்க்கப்பட்டது. அப்போது, அவரால் அத்தகைய பதிவு எதுவும் பகிரப்ப்படவில்லை என்பது தெளிவானது.

வைரலாகும் ஸ்கிரீன்ஷாட்டில் காணப்படுவது போல, ஷாருக்கான் மே மாதத்தில் ஒரு பதிவை மட்டுமே பகிர்ந்துள்ளார். அதில் அவர் மகாராஷ்டிரா மக்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தவும், மே 20 அன்று நடைபெற்ற ஐந்தாவது கட்ட மக்களவைத் தேர்தலில் மாநிலத்தில் வாக்களிக்கவும் வலியுறுத்தியுள்ளார்.

சமூக ஊடக பகுப்பாய்வு இணையதளமான சோஷியல் பிளேடில் இந்த பதிவு சரிபார்க்கப்பட்டது. மேலும் சமீபத்தில் எந்த இடுகையும் நீக்கப்படவில்லை என்பதும் கண்டறியப்பட்டது. அதை காட்டும் ஸ்கிரீன்ஷாட் கீழே உள்ளது.

முடிவு:

எனவே, இறுதியாக ஷாருக்கான் பெயரில் ஒரு போலி ஸ்கிரீன் ஷாட் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதாக டெஸ்க் முடிவு செய்யப்பட்டது. மேலும், ஷாருக்கான் சமூக வலைதளங்களிலோ, பொது வெளியிலோ அப்படி எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை என கண்டறியப்பட்டது.

Note : This story was originally published by 'PTI News' and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
bollywoodCongressFact CheckINCNews7Tamilnews7TamilUpdatesprime ministerRahul gandhiShahrukh Khan
Advertisement
Next Article