“இந்திய அணியின் சிறந்த கேப்டன் தோனி” - முகமது ஷமி புகழாரம்...!
“இந்திய அணியின் சிறந்த கேப்டன் தோனிதான்” என இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது, காலில் ஏற்பட்ட காயத்தால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர், இங்கிலாந்துக்கு எதிராக இதுவரை நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் பங்கேற்கவில்லை.
இந்நிலையில், ஷமியிடன் இந்திய அணியின் சிறந்த கேப்டன் யார் என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்த அவர், இது மிகவும் கடினமான கேள்வி. ஒப்பிடுதல்களுடன் இந்த கேள்வி கேட்கப்படுகிறது. ஆனால், என்னை பொறுத்த வரையில், தோனிதான் சிறந்த கேப்டன். அவர் இந்தியாவுக்காக பல கோப்பைகளை வென்றுள்ளார். அவரைப்போல், யாரும் வெற்றி பெறவில்லை என கூறியுள்ளார்.
ஐசிசி உலகக்கோப்பை, டி20 உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகிய கோப்பைகளை வென்ற அணியின் கேப்டனாக தோனி உள்ளார். பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான தோனி 2020 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். 2004 ஆம் ஆண்டு வங்கதேசத்திற்கு எதிராக சர்வதேச அரங்கில் அறிமுகமான தோனி, தனது 16 ஆண்டு கால வாழ்க்கையில் 538 போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் இந்தியாவுக்காக 350 ஒருநாள், 90 டெஸ்ட் மற்றும் 98 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.