For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தனுஷின் ‘குபேரா’ - நாகர்ஜுனா ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

09:07 PM May 02, 2024 IST | Web Editor
தனுஷின் ‘குபேரா’   நாகர்ஜுனா ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
Advertisement

குபேரா படத்தில் நடிகர் தனுஷூடன் நடிக்கும் தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

Advertisement

தனுஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் புதிய படம் குபேரா. சேகர் கம்முலா இயக்கும் இந்த படத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகர்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், குபேரா படத்தில் நாகர்ஜூனாவின் ஃபர்ஸ்ட் லுக் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

கனமழை பெய்யும் இரவு நேரத்தில் கட்டுக்கட்டாக பணம் அடுக்கி வைக்கப்பட்டுள்ள லாரி அருகில் நாகர்ஜூனா குடை பிடித்து நிற்கும் காட்சிகள் ஃபர்ஸ்ட் லுக் வீடியோவில் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Tags :
Advertisement