தனுஷின் கேப்டன் மில்லர் | வசூல் அப்டேட்...!
01:58 PM Jan 14, 2024 IST | Web Editor
Advertisement
தனுஷ் நடிப்பில் முழுக்க முழுக்க ஆக்ஷன் திரைப்படமாக வெளியாகியுள்ள கேப்டன் மில்லர் படத்தின் முதல் வசூல் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
Advertisement
கோலிவுட் திரையில் அறிமுகமாகி ஹாலிவுட் சினிமாவில் நடிக்கும் அளவிற்கு உருவெடுத்திருக்கிறார் நடிகர் தனுஷ். இவர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ”கேப்டன் மில்லர்” படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் தனுஷுடன் இணைந்து பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
மேலும் ஜனவரி 12 ஆம் தேதி வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆக்ஷன் பாணியில் உருவாகியிருக்கும் இப்படம் இரண்டு நாட்களில்உலகளவில் ரூ. 30 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது. இதைவைத்து பார்க்கும் போது அடுத்தடுத்து வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.