For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் தனஞ்ஜெயா டி சில்வா முன்னேற்றம்!

07:53 PM Mar 29, 2024 IST | Web Editor
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் தனஞ்ஜெயா டி சில்வா முன்னேற்றம்
Advertisement

ஐசிசி டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசையில் 14-வது இடத்துக்கு தனஞ்ஜெயா டி சில்வா முன்னேறியுள்ளார்.

Advertisement

அண்மையில் வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா தொடர்ச்சியாக இரண்டு சதங்கள் அடித்து அசத்தினார். இந்தப் போட்டியில் இலங்கை அணி 328 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தனஞ்ஜெயா டி சில்வா ஆட்டநாயகன் விருதினை வென்றார்.

இந்நிலையில், ஐசிசி டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் தனஞ்ஜெயா டி சில்வா 14-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஐசிசி டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசையில் டி சில்வா 15 இடங்கள் முன்னேறி 14-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். 695 ரேட்டிங் புள்ளிகளுடன் 14-வது இடத்தில் இருக்கும் அவர், முதல் 10 இடங்களுக்குள் முன்னேறுவதற்கு இன்னும் 40 ரேட்டிங் புள்ளிகளே தேவைப்படுகின்றன.

ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதல் மூன்று இடங்களில் கேன் வில்லியம்சன், ஜோ ரூட் மற்றும் பாபர் அசாம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement