”ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்காக போராடியவர் இரட்டைமலை சீனிவாசன்” - எடப்பாடி பழனிசாமி!
ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்காக போராடியவர் இரட்டைமலை சீனிவாசன் என்று அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
03:46 PM Sep 18, 2025 IST | Web Editor
Advertisement
தமிழகத்தின் ஒடுக்கப்பட்ட மக்களின்உரிமைகளுக்காக போராடிய முன்னோடி ஆளுமைகளுள் ஒருவர் இரட்டைமலை சீனிவாசன் ஆவார். இன்று அவருடைய நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
Advertisement
இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
” ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும் உயர்வுக்காகவும், தன் வாழ்நாளின் இறுதி மூச்சுவரை உறுதியாக நின்று போராடிய, சமரசமற்ற சமூகநீதி போராளி; "கல்வியே ஒடுக்கப்பட்டவரின் பேராயுதம்" என முழங்கிய புரட்சியாளர், ஐயா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவுநாளில், அவர்தம் பெரும் புகழையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்”
என்று தெரிவித்துள்ளார்.