களக்காடு ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜையெயொட்டி பக்தர்கள் இருமுடி கட்டி ஊர்வலம்!
களக்காடு ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜையெயொட்டி ஐயப்ப பக்தர்கள் இருமுடி கட்டி பிரம்மாண்ட ஊர்வலம் நடத்தினர்.
நெல்லை மாவட்டம், களக்காடு ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர்
மாதம் நடை திறக்கப்பட்டது. அதனைதொடர்ந்து வருஷாபிஷேக விழா நடந்தது. அதன்
தொடர்ச்சியாக மண்டல பூஜை விழா நேற்று கோலாகலத்துடன் தொடங்கியது. மண்டல பூஜையையொட்டி அதிகாலையில் சிறுவர், சிறுமிகளுக்கு ஐயப்ப மாலை அணிவிக்கப்பட்டது. மாலை 6 மணிக்கு மாலை அணிந்த சிறுவர்களுக்கு இருமுடி கட்டும் நிகழ்ச்சியும், கன்னிப் பூஜையும் நடைபெற்றது.
இருந்து தொடங்கிய ஊர்வலம் ரதவீதிகள் வழியாக சென்றது. ஊர்வலத்தின் முன்பு
குதிரைகள், அணிவகுத்து சென்றன. இதில் ஐயப்ப பக்தர்கள் உள்பட திரளானோர் கலந்து
கொண்டனர். அதன் பிறகு கோவில்பத்து ஆற்றாங்கரை பள்ளி வாசல் வந்ததும் பக்தர்களின் பேட்டை துள்ளல் நிகழ்ச்சி நடைபெற்றது.
பக்தர்கள் பேட்டை துள்ளல் நிகழ்ச்சியில் ஆடி பாடினர். அதனைதொடர்ந்து, ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டு திருவிளக்கு பூஜையும், 18ம் படிபூஜையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.